இந்திய டெஸ்ட் அணியில் சஹாவை தாண்டி ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு கிடைக்க இதுவே காரணம் – தினேஷ் கார்த்திக் பேட்டி

- Advertisement -

இந்த மாதம் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த இறுதிப் போட்டி மற்றும் இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கு வர்ணனை செய்ய பல்வேறு முன்னனி வர்ணனையாளர்கள் தயக்கம்காட்டிய நிலையில் இந்தியாவின் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராகா நியமிக்கப்பட்டுள்ளார். இது அவருடைய வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம் என்பதால் அதனைப் பற்றி அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.

Karthik

- Advertisement -

இந்த பேட்டியின்போது இந்திய விக்கெட் கீப்பர்களான சாஹா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் குறித்து தன்னுடைய கருத்தைக் கூறிய அவர், சாஹா ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விருத்திமான் சாஹா ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் ஆவார். என்னை பொருத்தவரை உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் அவரும் ஒருவர். ஆனால் ஒருவருடைய நம்பிக்கை அவர்களுடைய வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றும் என்பதை நாம் ரிஷப் பண்ட்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தியா A அணியிலும், ஐபிஎல் தொடர்களிலும் ரிஷப் பண்ட் நம்பிக்கையுடன் செயல்பட்டதை நாம் அனைவருமே கண்டிருக்கிறோம்.

இப்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் தனது பேட்டிங் திறமையை வளர்த்துக்கொண்டு உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். மற்ற அணிகள் எல்லாம் அவரை கண்டு பயப்படும் அளவிற்கு அவருடைய ஆட்டம் இருக்கிறது. இப்படி தனது அதீத தன்னம்பிக்கையினால் ரிஷப் பன்ட் வளர்ந்துவிட்டதால் தான், திறமை இருந்தும் விருத்திமான் சாஹாவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது என்று அவர் கருத்து கூறியிருக்கிறார். மேலும்,

Saha

அந்த பேட்டியில் ஒரு வர்ணனையாளராக மாறியிருப்பது பற்றி பேசிய அவர், ஒரு கிரிக்கெட் வீரராக இருந்து இப்போது வர்ணனையாளராக மாறி இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இது என்னுடைய வாழ்க்கையின் புது அத்தியாயம் என்பதால் இதனை நோக்கியே நான் பயணம் செய்யப் போகிறேன். மேலும் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நானும் ஒரு பகுதியாக கலந்து கொண்டிருப்பது அதிக சந்தோஷத்தை அளிக்கிறது என்றும் அவர் அந்த பேட்டியல் கூறியிருக்கிறார்.

pant 1

இந்தியா கடைசியாக 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது இந்திய டெஸ்ட அணியில் ஒரு வீரராக தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். மீண்டும் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியில் ஒரு வீரராக தினேஷ் கார்த்திக் இடம் பெறாமல் போயிருந்தாலும், ஒரு வர்ணனையாளராகா இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement