அவர் பொறுமையா விளையாடறதுல எந்த தப்பும் இல்ல. சீனியர் வீரருக்கு ஆதரவு தெரிவித்த – தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

கொரானா தொற்றின் பயம் காரணமாக முன்னணி வர்ணனையாளர்கள் பலரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு வர்ணனை செய்ய தயக்கம் காட்டிய நிலையில், தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை இந்த இறுதிப் போட்டிக்கான வர்ணனையாளராக நியமித்திருந்தது ஐசிசி. சர்வதேச போட்டியில் முதல் முறையாக வர்ணனை செய்ய இருக்கும் தினேஷ் கார்த்திக்கிடம் எடுத்த பேட்டி ஒன்றில், மந்தமான பேட்டிங் செயல்பாட்டால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு ஆளாகி இருந்த இந்திய வீரர் ஒருவருக்கு அவர் ஆதவராக பேசியிருப்பதோடு மட்டுமல்லாமல் அவருடைய அந்த செயல்பாடு இந்திய அணிக்கு மிக முக்கியமானது என்றும் கருத்து கூறி இருக்கிறார்.

Pujara

- Advertisement -

இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் வீரரான சேட்டேஸ்வர் புஜாரா கடந்த சில டெஸ்ட் தொடர்களாகவே விரைவாக ரன் எடுக்க தவறி வருகிறார் என்பதோடு மட்டுமல்லாமல் மோசமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருவதால், இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்ச்சனத்திற்கு ஆளாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு வர்ணனை செய்வதற்கு முன் தினேஷ் கார்த்திக்கிடம் எடுத்த பேட்டியில், புஜாராவிற்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது,

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒரு பேட்ஸ்மேனின் ஸ்ட்ரைக் ரேட்டைக் குறிப்பிட்டு அவரை விமர்ச்சனம் செய்வது முட்டாள் தனமான ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளாகவே 80-82 சதவீத டெஸ்ட் போட்டிகள் நான்கே நாட்களில் முடிந்துள்ளன. அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் அவரின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி கவலைப்படுகிறீர்கள். இந்தியாவிற்கு வெற்றியைத் தேடி தரும் நோக்கத்தில் அவர் விளையாடுகிறார். எனவே அவர் எந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட விரும்புகிறாரோ அந்த ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளையாடட்டும் என்று அந்த பேட்டியில் கூறிய அவர்,

pujara

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது புஜாராவைப் பற்றி பேட் கம்மின்ஸ் பேசிய சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிய போதும் தனது பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, இரண்டு இன்னிங்சிலும் அற்புதமாக ஆடி தோல்வியிலிருந்து இந்திய அணியை மீட்டெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவருடைய ஆட்டத்தைப் பற்றி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பேட் கம்மின்ஸ் தினேஷ் கார்த்திக்கிடம் பேசியிருக்கிறார். அது பற்றி கூறிய அவர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பேட் கம்மின்ஸ் என்னிடம் புஜாராவின் அந்த ஆட்டத்தைப் பற்றி பேசியிருந்தார். அந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற எல்லாமே சாதகமாக அமைந்த சூழ்நிலையிலும், அந்த போட்டியானது ட்ராவில் முடிந்ததற்கு புஜாராவின் ஆட்டம்தான் காரணம் என்று கூறினார்.

pujara 2

அவர் மட்டும்தான் அந்த போட்டியின் முடிவை தீர்மானித்திருந்தார் என்றும் அவர் கூறியதாக தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. நேற்று அறிவிக்கப்பட்ட இந்த போட்டிக்கான இந்திய அணியில் புஜாராவும் இடம்பிடித்திருக்கிறார்.

Advertisement