ஐ.சி.சி தொடர்களில் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடியும் இறுதியில் இந்திய அணி தோற்க இதுவே காரணம் – தினேஷ் கார்த்திக்

karthik
- Advertisement -

உலகின் தலை சிறந்த வீரர்களை உள்ளடக்கிய தலை சிறந்த அணியாக தற்சமயம் இந்திய அணி திகழ்கிறது. அனைத்து விதமான போட்டிகளிலும் சிறந்து விளங்கும் இந்திய அணி கடைசியாக 2013 ஐசிசி கோப்பையில் வெற்றி பெற்றது, அதன்பின் நடந்த 2 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2 டி20ஐ உலக கோப்பையில் டைட்டில் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. என்னதான் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் இறுதிப்போட்டயிலும் நாக்அவுட் போட்டிகளிலும் சொதப்புவது என்பதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

karthik

- Advertisement -

2014 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைத்து அணிகளையும் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில் வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்த்த நிலையில் தோல்வியை தழுவி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது, அதேபோல 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தன் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவியது, அதன்பின் சமீபமாக 2019 இல் நடைபெற்ற 50 ஓவருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோற்றது.

2019 உலக கோப்பை இந்தியா தான் கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று கிரிக்கெட் வல்லுநர்கள் உட்பட அனைத்து தரப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஐ.சி.சி.தொடர்களின் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

Dhoni-2

இந்திய அணி உலகில் ஒரு மிகச் சிறந்த அணியாகும். ஐசிசி உலகக் கோப்பையை வெல்வதற்கு என்று ஒரு தனி வழி கிடையாது, இந்திய அணிக்கு கோப்பையை வெல்லும் அந்த தகுதி எப்பொழுதும் உள்ளது என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது, இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பல அணிகளை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்கிறது. ஆனால் எதிர்பாராத விதமாக இந்திய அணியால் கோப்பையை இறுதியில் வெல்ல முடியவில்லை, அந்த நாள் எந்த அணிக்கு சிறப்பாக அமைகிறதோ அந்த அணியே வெற்றி பெறும் என்று கூறினார்.

Dhoni

இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் திறமைகளும் உள்ள அணியாகும். அதனால் வரும் ஐசிசி போட்டிகளில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் கூறினார். மேலும் அவர் கூறியதாவது போட்டியில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் சாதாரண விஷயம், ஒருவேளை இந்திய அணி தோல்வியடைந்தால் நீங்கள் அதற்காக கடினமாக நடந்து கொள்ள கூடாது என்று தனது விளக்கததை எடுத்துக் கூறினார்.

Advertisement