இது மட்டும் நடக்காம நான் ரிட்டயர்டு ஆக மாட்டேன். என்னோட ஓய்வு எப்போ தெரியுமா ? – தினேஷ் கார்த்திக்

karthik

நம் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 2004ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். பேட்டிங் மற்றும் கீப்பிங் என இரண்டிலும் அசத்தி ஜாம்பவான் வீரர்களிடமிருந்து நற்பெயரை பெற்றுக்கொண்ட கார்த்திக் பிற்காலத்தில் மிகப் பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். துரதிஷ்டவசமாக அதேசமயம் விதியின் வசமாக அதே வருடம் மகேந்திர சிங் தோனி என்ற ஒரு வீரர் இந்திய அணியில் தனது கால்தடம் பதித்தார். அதன் பின்பு என்ன நடந்தது என்பதைப் பற்றி நாம் அறிவோம்.இவர் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் தோனியின் பக்கம் சென்றன.

ஐசிசி உலக கோப்பை தொடர்களில் இதுவரை தினேஷ் கார்த்திக் மிக கம்மியான அளவிலே ஆடி உள்ளார். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் பங்கு பெற்றார். 2009 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கு பெற்றார். அதன் பின்னர் பல போட்டிகளிலும் தொடர்களிலும் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டார். கடைசியாக ஒரு வழியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டித்தொடரில் இடம்பெற்றார்.

பின்னர் அதிலிருந்து தற்போது வரை எந்தப் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் விளையாடவில்லை.
ஒரு வழியாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் இரண்டு ஆண்டுகள் அணியை வழி நடத்தினார். பின்பு சென்ற ஆண்டு தனது கேப்டன் பதவியை இயான் மோர்கன் இடம் கொடுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 35 வயதை கடந்துவிட்ட தினேஷ் கார்த்திக் இனி இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது சாத்தியமில்லை.

Karthik

எனவே இவர் எப்போது ஓய்வு பெறுவார் எங்கு என்கிற எண்ணத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் இன்னும் இரண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடர் விளையாடுவேன் என்று அதிரடியாக பதில் அளித்து உள்ளார்.

- Advertisement -

karthik

மேலும் பேசிய கார்த்திக் : தற்பொழுது ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு இல்லை. கீப்பிங்கிலும், பேட்டிங் பயிற்சியிலும் எனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன். இன்னும் 2 டி20 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடாமல் நிச்சயம் ஓய்வு பெற மாட்டேன். எனவே எனது ஓய்வு குறித்த அறிக்கை வருவதற்கு இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் ஆகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.