Dinesh Karthik : இந்திய அணிக்கு நான் பேன்ட்-எய்ட். உலகக்கோப்பை குறித்து – தினேஷ் கார்த்திக்

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Karthik
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Team-1

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

இந்நிலையில் இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் அளித்த பேட்டியில் : இந்திய அணிக்கு நான் 12 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பை அணியில் தேர்வாகி உள்ளேன். இருப்பினும், தோனி விளையாடாத போட்டியில் நான் மாற்று வீரராக பதிலாக களமிறங்குவேன் என்றே இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக நான் இந்திய அணியின் பேன்ட்-எய்ட் போன்று என்னை பயன்படுத்த இருக்கிறார்கள். ஆனால், எனக்கு எனது ஆட்டத்திறன் மீது முழு நம்பிக்கை உள்ளது.

karthik3

ஆகவே, நான் உலகக்கோப்பை தொடரில் 4 ஆவது இடத்திலும் அல்லது பினிஷிங் என எந்த இடத்தில் இறங்கினாலும் இந்திய அணிக்காக எனது முழுத்திறனையும் கொடுத்து இந்திய அணியை வெற்றி பெறச்செய்யும் ஒரே எண்ணத்தை கருத்தில் கொண்டு விளையாடுவேன். இந்திய அணியை வெற்றிபெற செய்து இந்திய அணிக்கு பெருமை சேர்ப்பதே என் இலக்கு என்றும், நிச்சயம் இருந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

Advertisement