உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : என்னோட ஸ்கில் என்னனு இந்த போட்டியில பாப்பீங்க – தினேஷ் கார்த்திக் அதிரடி

Karthik

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது வருகிற 18-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இத்தொடருக்கான புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதற்கு முன்னராக கொரானா தொற்றின் பயம் காரணமாக இந்த இறுதிப்போட்டியில் வர்ணனை செய்ய பல முன்னணி வர்ணனையாளர்கள் தயக்கம் காட்டிய நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்த போட்டிக்கான வர்ணனையாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் ஒரு தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்திருக்கும் அவர், தன்னால் சிறப்பான முறையில் வர்ணனை செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் பேசிய அவர்,

Karthik

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வர்ணனை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பேரதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். அந்தப் போட்டியில் விளையாட போகும் இரு அணி வீரர்களுடனும் நான் விளையாடி இருப்பதால், அவர்கள் எந்த மாதிரியாக யோசிப்பார்கள் என்றும், போட்டியின் போது அவர்களின் யுக்திகள் என்னவாக இருக்கும் என்றும் எனக்கு நன்றாக தெரியும். அதனால் ஒரு வர்ணனையாளராக என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறிய அவர், இந்திய அணியில் திறமைவாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் காரணத்தினால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

அந்தப் பேட்டியில் தன்னுடைய சொந்த கிரிக்கெட் வாழ்க்கையை பற்றி பேசிய அவர், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு தனக்கு இன்னமும் இருப்பதாகவும் தெரிவித்தார். அது குறித்து பேசிய அவர், கிரிக்கெட் விளையாட்டின் மீது எனக்கு பேரார்வம் இருக்கிறது. அதன் காரணமாக இந்திய அணிக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் எனக்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் என்னுடன் தொடர்ந்து கொண்டே வருகிறது என்று அவர் கூறினார். இந்திய டெஸ்ட் அணியில் கண்டிப்பாக தினேஷ் கார்த்திற்கு இடம் கிடைப்பது என்பது முடியாத விடயம் என்பதால்தான் அவர் லிமிடெட் ஓவர் போட்டிகளில் வாய்ப்பை பெற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

karthik

இருந்தாலும் அதற்கு வயது ஒரு பெரிய தடையாக இருக்கிறது. தற்போது அவருக்கு 36 வயதாகிறது. இதன் காரணமாக இந்திய அணியில் அவருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்களது உடல் தகுதியை நிரூபிக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணியில் பின்பற்றப்படும் உடல்தகுதி சோதனையில் ஒரு வீரர் தேர்ச்சி அடைந்து விட்டால் அவர் கண்டிப்பாக இந்திய அணியில் இடம் பிடித்து விடலாம். எனவே நம் உடலை பிட்டாக வைத்திருந்தால் அந்த இடத்தில் வயது என்பது ஒரு காரணமாக பார்க்கப்படாது என்று கூறிய அவரின் குறிக்கோளாக, எதிர் வரும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

Dkarthik

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட இருக்கும் தினேஷ் கார்த்திக் அந்த இறுதிப் போட்டி முடிந்தவுடன், இங்கிலாந்திலேயே நடைபெற இருக்கும் தி ஹண்ட்ரட் என்ற புதுவிதமான கிரிக்கெட் தொடரிலும் வர்ணனையாளராக செயல்பட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement