தோனி அறிமுகமானபோதே எனக்கு அந்த விஷயம் தெரிஞ்சிடுச்சி. அதோட க்ளோஸ் – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

Karthik
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வழி நடத்தியுள்ளார். 2004ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக் இதுவரை கிட்டத்தட்ட 17 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். தற்போது கடந்த இரண்டு மாத காலங்களாக இங்கிலாந்தில் தங்கி கிரிக்கெட் வர்ணனையும் செய்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த தினேஷ் கார்த்திக் தோனி குறித்த பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் எப்போதுமே ஒரே இடத்தில் தேங்கி இருந்தது கிடையாது. எப்போதும் அடுத்து என்ன என்ன என்ற தேடலுடன் நகர்ந்து கொண்டே இருப்பேன்.

இந்திய அணிக்காக துவக்க வீரராகவும் சரி, வெளிநாடுகளிலும் சரி விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னிடம் நீங்கள் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் உங்களால் துவக்க வீரராக விளையாட முடியும் என்று தோனி என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். இதையேதான் டிராவிடும் என்னிடம் அடிக்கடி சொல்வார் என்று கார்த்திக் கூறினார்.

karthik

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில் : தோனி ஒரு புயல் போல இந்திய அணிக்கு அறிமுகமானார். அதே வேகத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் தன் பக்கம் இழுத்து விட்டார். அப்போதே எனக்கு தெரிந்து விட்டது எனக்கான கதவு இந்திய அணியில் மூடப்பட்டது என்று. ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எப்போதாவதுதான் அமைவார்கள்.

அந்த வகையில் தோனி இந்திய அணிக்கு அறிமுகமான பின்னர் மிகப்பெரிய வீரராகவும் அடுத்த தலைமுறைக்கான வீரராகவும் உயர்ந்துவிட்டார். ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சரியாக அணிக்கு கிடைத்து விட்டால் நிச்சயம் 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீடிப்பார்கள் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement