Dinesh Karthik : பவர்ப்பிளே ஓவர்களில் நடந்த இந்த தவறுகளே தோல்விக்கு காரணம் – கார்த்திக் புலம்பல்

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான

Karthik
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணிக்கு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கொல்கத்தா அணி சார்பாக 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரசல் 44 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ரசலின் இந்த ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி ஓரளவு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Gill

பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் டுபிலிஸிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

Chahar

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது : முதலில் நாங்கள் வெற்றிக்கு போதுமான அளவு ரன்களை அடிக்கவில்லை. போட்டி முடிந்த பிறகு 20 ரன்கள் அதிகமாக அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று நினைப்பதுவழக்கம் தான். ஆனால் நாங்கள் உண்மையில் செய்த தவறு யாதெனில் பவர்பிளே ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்தது தான்.

Russell

ரசல் ஒருவர் மட்டும் சிறப்பாக ஆடினார். ஆட்டத்தில் அவரின் முதிர்ச்சி ஆச்சரியமளிக்கிறது. மேலும், எந்த சூழ்நிலையிலும் அவரால் ரன்களை குவிக்க முடிகிறது. இந்த குறைந்த இலக்கினை வைத்துக்கொண்டு நாங்கள் இவ்வளவு தூரம் போராடியது சிறப்பான ஒன்றாகும். தோல்வியை மறந்து அடுத்த போட்டியை புதிய போட்டியாகவும், அடுத்த நாளை புதிய நாளாகவும் நினைத்து அடுத்த போட்டியில் ஆட தயாராக உள்ளோம் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

Advertisement