- Advertisement -
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது.
- Advertisement -
பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று கோப்பையை வென்று அசத்தியது.
வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் 8பந்துகளில் 29ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதுபெற்ற பின் பேசிய தினேஷ் கார்த்திக் “இதுபோன்ற சூழல்களில் ஆட்டத்தை முடிப்பது எல்லாம் நம்முடைய அனுபவத்தின் வாயிலாக கிடைக்கும் பக்குவம் தான்.
அதையெல்லாம் நம்மால் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கிட முடியாது. தோனி தான் இதுபோன்ற பினிசிங்கை கொடுப்பார். எனக்கும் ரோல்மாடல் அவர்தான். அவரிடமிருந்து தான் இதை கற்றுக்கொண்டேன்” என்றும் பேசினார்.
Advertisement