சூப்பர் ஓவர் வரை சென்றும் எங்கள் அணி தோற்றதற்கு இவரே காரணம் – தினேஷ் கார்த்திக் பேட்டி

Dinesh
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 10 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியும், டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச டெல்லி முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை அடித்தது. கொல்கத்தா அணி சார்பாக 28 பந்துகளில் 62 ரன்களை குவித்து கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார்.

Kolkata

- Advertisement -

பிறகு ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் சரியாக 185 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பில் துவக்க வீரர் பிரிதிவி ஷா சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 99 ரன்களை குவித்தார். இதனால் போட்டி டை ஆனது. பிறகு வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய டெல்லி அணி 10 ரன்களை குவித்தது. பிறகு கொல்கத்தா அணியால் 7 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு தோல்வி குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறியதாவது : இந்த போட்டி ஒரு சிறப்பான போட்டியாகும். இரண்டு அணிகளுமே சிறப்பாக மோதியது. போட்டி டையில் முடிந்தது இருப்பினும், சூப்பர் ஓவரில் சிறப்பாக செயல்பட்டு டெல்லி அணி எங்களை வீழ்த்தி விட்டது. டெல்லி அணியின் ரபாடா சிறப்பாக பந்துவீசினார்.

rabada

அவர் வீசிய சூப்பர் ஓவர் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் வகையில் இருந்தது. மேலும், ரஸல் சிறப்பான ஆட்டத்தினை தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக வழங்கி வருகிறார். அவரே எங்கள் அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

Advertisement