முதல் ஸ்லிப்பிற்கு சென்ற பந்தை அசால்டாக கேட்ச் பிடித்து அசத்திய தினேஷ் கார்த்திக் – வைரலாகும் வீடியோ

Karthik

இந்தியாவில் தற்போது தியோதர் டிராபி கோப்பை தொடர் நேற்றுடன் முடிவு பெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டி ராஞ்சி மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் பார்த்திவ் படேல் தலைமையிலான இந்திய பி அணியும், கில் தலைமையிலான இந்திய சி .அணியும் மோதின இந்த போட்டியில் பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா சி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் பிடித்த கேட்ச் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பார்த்திவ் பட்டேல் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது அவரின் பேட்டில் பந்தப்பட்ட பந்து எட்ஜ் ஆகி முதல் ஸ்லிப் இருக்கும் திசை நோக்கி சென்றது. அதனை தினேஷ் கார்த்திக் தனது இடது புறம் பாய்ந்து அபாரமாக டைவ் கேட்ச் செய்து அசத்தினார்.

இதனைக்கண்ட ஸ்லிப்பில் இருந்த அகர்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கொண்டாடத் துவங்கினர். தினேஷ் கார்த்திக்கின் இந்த அசாத்தியமான கேட்ச் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.