சத்தமில்லாமல் ப்ராவோ, கெயில் உலகசாதனைகளை தூளாக்கிய தினேஷ் கார்த்திக் – ஆனாலும் விமர்சிக்கிறாங்களே

Dinesh-Karthik
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்தியா பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளுக்கு எதிரான 2 லீக் சுற்றுப் போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று நடைபெறும் தன்னுடைய முதல் சூப்பர் 4 சுற்று போட்டியில் மீண்டும் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்வதால் அனைவரிடமும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த தொடரில் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் பினிஷிங் செய்வார்கள் என்பதால் அந்த வேலையை மட்டும் செய்வதற்காக இந்த அணியில் தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் ஆரம்பத்திலேயே நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டார்.

Dinesh-Karthik

- Advertisement -

கடைசியாக கடந்த 2019 உலகக்கோப்பையில் விளையாடி ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்ததால் இந்திய கிரிக்கெட் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் தம்மால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுக்க முடியும் என்ற லட்சியத்துடன் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக லோயர் மிடில் ஆர்டரில் அதிரடியாக பேட்டிங் செய்து தன்னை மிகச்சிறந்த பினிஷெராக நிரூபித்தார்.

ஆதரவும் எதிர்ப்பும்:
குறிப்பாக விராட் கோலி, டு பிளேசிஸ் போன்ற முக்கிய வீரர்கள் சொதப்பிய பெரும்பாலான போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி 330 ரன்கள் வெளுத்து வாங்கிய அவர் குறைந்தது 3 – 4 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்தார் என்றே கூறலாம். அதிலும் ரசல் போன்ற வெளிநாட்டு இளம் காட்டடி மன்னர்களைக் காட்டிலும் 183.33 அதிகப்படியான அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் ரன்களை குவித்த அவர் அதற்காக சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற ஸ்பெஷல் விருதை 37 வயதில் வென்று வயதை வெறும் நம்பர் என்று நிரூபித்தார்.

Dinesh Karthik 3

அதனால் தாமாக தேர்வுக்குழு முன்வந்து தேர்வு செய்ததால் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அவர் தென் ஆப்பிரிக்க தொடரில் இந்தியா பதிவு செய்த 2 வெற்றிகளிலும் முக்கிய பங்காற்றி அதன்பின் நடந்த இங்கிலாந்து தொடரில் சுமாராக செயல்பட்டாலும் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் அசத்தலாக செயல்பட்டார்.

- Advertisement -

வரலாற்று நாயகன்:
முன்னதாக கடந்த 2006இல் ஜோகன்னஸ்பர்க் நகரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வீரேந்திர சேவாக் தலைமையில் இந்தியா களமிறங்கிய வரலாற்றின் முதல் டி20 போட்டியில் விளையாடிய இந்திய வீரர்களில் இப்போதும் விளையாடும் ஒரே வீரராக பெருமை பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். அதற்கிடையே எம்எஸ் தோனியின் வருகையால் பெரும்பாலும் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெறாத போதிலும் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சி செய்யும் அவர் கடுமையாக உழைத்து 37 வயதிலும் இந்திய அணிக்காக விளையாட போராடிக் கொண்டிருக்கிறார்.

Dinesh Karthik

அந்தப் போராட்டத்தின் ஒரு அங்கமாக இந்த ஆசிய கோப்பையில் விளையாடி வரும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நீண்ட வருடங்கள் விளையாடிய வீரர் என்ற புதிய உலக சாதனையை சத்தமின்றி படைத்துள்ளார். கடந்த 2006இல் வரலாற்றில் இந்தியாவின் முதல் டி20 போட்டியில் அறிமுகமாகி உலகிலேயே அதிகபட்சமாக கடந்த 15 வருடங்கள் 270 நாட்களாக இன்னும் விளையாடி வருகிறார். இதுநாள் வரை அந்த சாதனையை வெஸ்ட் இண்டீசின் ஜாம்பவான்கள் கிறிஸ் கெயில் மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தங்களது வசம் வைத்திருந்தனர். அவர்களும் 2006இல் ஒரேநாளில் அறிமுகமாகி நவம்பர் 2021இல் ஒரே நாளில் ஓய்வு பெற்று விட்டதால் அவர்களை முந்தி தற்போது தினேஷ் கார்த்திக் இந்த சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. தினேஷ் கார்த்திக் : 15 வருடங்கள் 270 நாட்கள்*
2. கிறிஸ் கெய்ல் : 15 வருடங்கள் 263 நாட்கள்
3. டுவைன் பிராவோ : 15 வருடங்கள் 263 நாட்கள்

Dravid

மேலும் 37 வயதுக்கு பின் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களையும் 2 ஆட்டநாயகன் விருதுகளையும் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ள அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து கேப்டன் ரோகித் சர்மாவும் ராகுல் டிராவிட்டும் ஆதரவு கொடுக்கின்றனர். அப்படி கேப்டனும் அணி நிர்வாகமும் வாய்ப்பு கொடுத்தாலும் சில முன்னாள் வீரர்கள் தான் எதையாவது பேசி அவரது இடத்திற்கு பாதகமாக செயல்படுவது ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது.

Advertisement