ரெண்டு போட்டியை வச்சி மட்டும் அவரை முடிவு பண்ணி ஒதுக்கிட கூடாது. அவர் நல்ல பவுலர் – சப்போர்ட் செய்த தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளிலும் குல்தீப் யாதவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை குல்தீப் சரியாக பயன்படுத்தவில்லை என்பதே சோகமான விஷயமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் வீசிய குல்தீப் யாதவ் மொத்தமாக 84 ரன்கள் கொடுத்தார். அவர் ஒரு விக்கெட் கூட கைபற்ற வில்லை என்பதும் மொத்தமாக எட்டு சிக்சர்களை அவர் தனது ஓவர்களின் மூலம் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kuldeep

- Advertisement -

அவரின் இந்த மோசமான செயல்பாடு காரணமாக அவர்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி 3 ஆவது ஒருநாள் போட்டியில் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக வீரரான தினேஷ் காரத்தில் குல்தீப் யாதவ் நிச்சயமாக பழைய நிலைக்கு திரும்ப வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய தினேஷ் கார்த்திக் : கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் கலந்த வண்ணம் இருக்கும்.

ஒவ்வொரு போட்டியும் நாம் எதிர்பார்க்கும் வண்ணம் இருக்காது. அதுதான் அன்று குல்தீப் யாதவுக்கு நிகழ்ந்தது. அன்று அவருக்கு மிக மோசமான நாளாக அமைந்தது. மிக நீண்ட இடைவேளைக்குப் பின்பு ஆடும் குல்தீப் யாதவ் முதல் 5 ஓவர்களில் மிக நன்றாக பந்துவீசினார். பின்னர் அடுத்த ஐந்து ஓவர்கள் சரியாக பந்து வீசாமல் ரன்களை கொடுத்தார். ஆனால் அந்தப் போட்டியில் மிக அபாரமான நிலையில் அடுத்து ஆடிய பென் ஸ்டோக்ஸ் தான் குல்தீப் யாதவின் மோசமான ஓவர்களுக்கு காரணம்.

kuldeep

பென் ஸ்டோக்ஸ் உலகின் எந்தவித இடது கை சுழற்பந்து வீச்சாளரின் பந்துகளை துவம்சம் செய்யும் சக்தி கொண்டவர். அன்று அந்த போட்டியிலும் அதைத்தான் அவர் செய்தார். பென் ஸ்டோக்ஸ் அடித்து ஆடும் வேளையில் குருனல் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவுக்கு பந்து கொடுக்காமல் அந்தப் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய தாகூருக்கு பந்தை கொடுத்திருக்க வேண்டும்.

kuldeep 1

அந்தப் போட்டியில் அப்படி தாகூருக்கு பந்துவீச வாய்ப்பு அளித்திருந்தால் நிச்சயமாக அவர் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றி இருந்திருப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறினார். மேலும் பேசிய அவர் குல்திப் யாதவ் நிச்சயம் இனிவரும் காலங்களில் மிக அபாரமாக விளையாடி தனது பழைய ஆட்டத்தை எல்லோருக்கும் காண்பிப்பார் அடுத்த 2 மாதம் அவருக்கு முக்கியமானது என்று மீண்டும் ஒருமுறை நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement