ரெய்னா இடத்தில் தினேஷ் கார்த்திக் ஆட வேண்டும்..! சேவாக் அதிரடி கருத்து..! – காரணம் இதுதான்..?

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 கேந்த்ரா கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறக்கபட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
raina
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நாளை துவங்க இருக்கிறது.இதில் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இந்தியா டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷேவாக் இந்திய அணியில் சுரேஷ் ரெய்விற்கு பதில் அல்லது அவருக்கு முன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் வரிசையில் ஆடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் தெரிவிக்கையில்”சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். அவர் நிதாஸ் கோப்பை போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடினர். அவர் தற்போது இந்திய அணியில் விளையாடுவதற்கு இது சிறப்பான தருணம்” என்று கூறியுள்ளார்.
sachinshewag
அதே போல “இந்திய அணியில் ராகுல் 3வது பேட்டிங் வரிசையில் இறங்க வேண்டும். ஏனெனில் தவான் மற்றும் ரோஹித் துவக்க ஆட்டக்காரர்களாகே இருப்பார்கள். அணியின் கேப்டன் கோலி 4வது ஆர்டரில் இறங்க வேண்டும். இதை தவிர ஆடும் XI -ல் எந்த ஒரு மாற்றமும் செய்ய வேண்டியது இல்லை என்று நான் உனர்கிறேன் ” என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.