IND vs RSA : நான் பேட்டிங் செய்ய வந்ததும் ஹார்டிக் பாண்டியா என்கிட்ட இதைத்தான் சொன்னாரு – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

Dinesh-Karthik
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷர் ரோலில் விளையாடிய தினேஷ் கார்த்திக் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததன் காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை முதல் மூன்று போட்டிகளில் மிகப்பெரிய அளவில் அவர் பயன்படுத்தவில்லை என்றாலும் நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் தனது வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தினார் என்றே கூறலாம். ஏனெனில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பெரிய அளவில் அவர் ரன்களை குவிக்கவில்லை என்றாலும் நேற்றைய போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

Dinesh Karthik and Hardik Pandya

- Advertisement -

அதன்படி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 81 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது களத்தில் ஜோடி சேர்ந்த ஹார்டிக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகச் சிறப்பான ரன் குவிப்பை வழங்கினர். பாண்டியா 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறி இருந்தாலும் கடைசி ஓவர் வரை தாக்குப் பிடித்த தினேஷ் கார்த்திக் இறுதி ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும் தனது வேலையை அவர் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செய்தார் என்றே கூறலாம்.

ஏனெனில் பினிஷிங் ரோலில் அதிரடி காண்பிக்கும் தினேஷ் கார்த்திக் இந்த போட்டியிலும் 27 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சர்கள் என 55 ரன்கள் எடுத்து தனது அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக இந்திய அணியும் 169 ரன்களை குவிக்க தென்னாப்பிரிக்க அணி 87 ரன்களில் சுருண்டது. இதன் காரணமாக இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் காரணமாக அமைந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Dinesh Karthik MoM

இந்நிலையில் போட்டி முடிந்து தனது ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : நான் இன்று பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இந்திய அணியில் நான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன். கடைசி போட்டியில் நான் நினைத்த திட்டங்கள் சரியாக செல்லவில்லை என்றாலும் இந்த போட்டியில் என்னுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன். இந்த மைதானத்தில் சூழ்நிலையை கணித்து விளையாட பயிற்சி மிக முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

தென்ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த மைதானமும் பேட்டிங் செய்ய மிகவும் கஷ்டமாக இருந்தது. பவுண்டரிகளை அடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நான் மைதானத்திற்கு பேட்டிங் செய்ய களமிறங்கும் போதே ஹர்டிக் பாண்டியா என்னிடம் வந்து நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதுவரை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். நான் மைதானத்தின் தன்மையை அறிவதற்காக சில பந்துகளை எதிர்கொண்ட பிறகு எனது அதிரடியை ஆரம்பித்தேன் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

இதையும் படிங்க : IND vs RSA : இந்தியாவுல இந்திய அணிக்கு எதிரா இப்படி பண்றது ரொம்ப கஷ்டம் – தோல்வி குறித்து தெ.ஆ கேப்டன் வருத்தம்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பெங்களூரு மைதானம் எனக்கு சொந்த மைதானம் போன்றது. அங்கு நான் ஆர்.சி.பி அணிக்காக போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் பல போட்டிகளில் அங்கு நான் விளையாடி உள்ளேன். நிச்சயம் இந்த தொடரின் இறுதிப்போட்டி மிக சுவாரசியமாக அமையும். அந்த போட்டியிலும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை தொடருவேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement