2023 உலககோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்க தமிழக வீரர்களில் இவர் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பிருக்கு – தினேஷ் கார்த்திக்

Dinesh-Karthik-1
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டிருந்த வேளையில் இந்த உலகக் கோப்பை தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 10 நகரங்களில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

worldcup

- Advertisement -

இப்படி கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெறயிருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரினை காண ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் அக்டோபர் 8-ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.

அதனை தொடர்ந்து பாகிஸ்தான அணியை அக்டோபர் 15-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் சந்திக்கிறது. இந்திய அணி இடம் பெற்றுள்ள குழுவில் பலமான அணிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த உலகக் கோப்பை தொடர் ரசிகர்களுக்கு மிகவும் சுவாரசியமாக அமைய வாய்ப்புள்ளது.

Washington Sundar.jpeg

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை குறித்த பல்வேறு கேள்விகளுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் பதிலளித்து வரும் வேளையில் தமிழக அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கையில் இந்த உலகக் கோப்பை குறித்த பல்வேறு கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஒரு நிருபர் : இந்த உலகக் கோப்பை தொடரில் தமிழக வீரர் யாராவது இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக் கூறுகையில் : தற்போதைக்கு இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்க வாஷிங்டன் சுந்தருக்கு மட்டுமே ஒரு அவுட் சைடு சான்ஸ் இருக்கிறது. அவரை தவிர்த்து வேறு யாருக்கும் வாய்ப்பில்லை என நேரடியாகவே பதிலளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2023 உ.கோ செமி ஃபைனல் : ஒருவேளை இந்தியா – பாக் மோதினால் அது மும்பை, கொல்கத்தாவில் மட்டும் தான் நடக்கும், ஏன் தெரியுமா?

என்னதான் தினேஷ் கார்த்திக் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தாலும் தற்போதுள்ள இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஹார்டிக் பாண்டியா, தீபக் ஹூடா போன்ற ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement