விவிஎஸ் லட்சுமணனுக்கு நன்றி சொன்ன தினேஷ் கார்த்திக் – காரணம் இதுதான் ?

- Advertisement -

இலங்கையில் நடைபெற்று முடிந்த முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி நிமிடத்தில் அபாரமாக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிப்பெற செய்தார் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்.முத்தரப்பு தொடரில் சிறப்பாக விளையாடியதின் காரணமாக தற்போது ஐபிஎல்-இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

karthik

- Advertisement -

முத்தரப்பு தொடரில் சிறப்பாக விளையாடிய பின்னர் பேசிய தினேஷ் கார்த்திக் தன்னுடைய இந்த வெற்றிகரமான ஆட்டத்திற்கு பின்னர் முன்னாள் இந்தியவீரரான அபிஷேக் நாயரின் பங்கு மிகப்பெரியது. கடினமான நேரங்களில் மூன்றாண்டுகள் உடனிருந்து என்னுடைய ஆட்டத்திறமையை மேம்படுத்தினார் என்று அபிஷேக் நாயருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

தற்போது தினேஷ் கார்த்திக் தன்னுடைய இன்றைய நிலைக்கு காரணமான அபிஷேக் நாயரை தவிர்த்த மற்றொரு முன்னாள் இந்திய வீரரான லட்சுமணனுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Laxman

லட்சுமணனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் லட்சுமணனை பற்றி பேசுகையில் “ஆட்டத்தின் போது நாம் எவ்வளவு ரன்கள் எடுக்கப்போகின்றோம் என்பது முக்கியமில்லை, நம் அணி வெற்றிபெற நாம் எப்படி ஆடி ரன்களை பெறவேண்டும் என்பதை மனதில் வைத்து ஆடிட வேண்டும்” என்று லட்சுமணன் தனக்கு அறிவுரை கூறியதாகவும், அவரது அறிவுரையை ஏற்று மனதில் வைத்து ஆடியதால் தான் தன்னால் இவ்வளவு தூரம் விளையாட முடிந்தது என்றும் கூறினார்.

மேலும் பேசிய கார்த்திக் “நான் நிச்சயம் லட்சுமணனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன், என் வாழ்வின் இருளை போக்கி ஒளி ஏற்றியவர்” என்று லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்தார்.இவ்வளவு காலமாக கவுதம் கம்பீர் வழிநடத்தி வந்த கொல்கத்தா அணியை இந்த ஐபிஎல் முதல் தினேஷ் கார்த்திக் வழிநடத்திடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement