ஹார்டிக் பாண்டியா குறித்து ஒற்றை வார்த்தையில் பதிலளித்த தினேஷ் கார்த்திக் – விவரம் இதோ

Karthik

இந்திய அணியின் முக்கிய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் திகழும் தினேஷ் கார்த்திக் தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் மூலம் 2004ல் இந்திய இந்திய அணியில் இடம் பெற்றார். இந்திய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி இருந்தாலும் நிரந்தர இடம் இல்லாமல் அவ்வப்போது வருவதும் போவதுமாக உள்ளார். இவர் இந்திய அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் பங்கு பெற்று விளையாடியிருக்கிறார். இவர் பேட்டிங்கில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் குவித்திருக்கிறார்.

karthik

டெஸ்ட் போட்டியில் இவர் 129 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருக்கிறது. இதையடுத்து ஐபிஎல் தொடரிலும் தினேஷ் கார்த்திக் விளையாடி இருக்கிறார். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி, கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், குஜராத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் விளையாடியிருக்கிறார். 2018 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட அவர் 2020 அக்டோபர் 16 வரை அந்த பதவியில் இருந்தார்.

இதன் பிறகு இங்கிலாந்து அணி வீரரான இயோன் மோர்கனிடம் இந்த பதவியை வழங்கினார். இந்நிலையில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் சிறிது நேரம் ரசிகர்களிடம் பொழுது போக்க தனது ட்விட்டரில் கேள்வி-பதில் அமர்வை நடத்தினார். தினேஷ் கார்த்திக் இதற்காக Go! #AskDK என்ற ஹஸ்டாக்கை உருவாக்கினார். இதில் ரசிகர்கள் தினேஷ் கார்த்திக்கிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றனர்.

karthik

அந்த வகையில் ரசிகர் ஒருவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அந்த ரசிகர் ஹர்திக் பாண்டியா குறித்து ஒற்றை வார்த்தையில் கூறுமாறு கேட்டார்.

- Advertisement -

Pandya 1

ஆனால் தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியாவுடன் இருக்கும் நட்பை ஒற்றை வார்த்தையில் சொல்லாமல் ஒற்றை வரியில் சொல்லி அசத்தினார். ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக் “மற்றோர் தந்தையிடம் இருந்து கிடைத்த சிறந்த சகோதரர் தான் ஹர்திக் பாண்டியா” என்று கூறி ரசிகர்களை நெகிழ வைத்தார். தினேஷ் கார்த்தியின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.