ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதம் அடித்ததே என் பேட்லதான் – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

Karthik

இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். ஏகப்பட்ட கேப்டன்களுக்கு கீழ் இவர் விளையாடி இருந்தாலும், தோனியின் இடம் காரணமாக இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காமல் போனது. கடைசியாக 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இடம்பெற்று விளையாடிய கார்த்திக் அதன் பின்னர் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

Karthik

இந்நிலையில் தற்போது சமூக வலைதளம் மூலமாக அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வர தினேஷ் கார்த்திக் ரோகித் சர்மா அடித்த முதல் அரைசதம் குறித்தும் தனது ஞாபகங்களை வெளிப்படுத்தியுள்ளார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டர்பன் மைதானத்தில் ஒரு டி20 போட்டி எதிர்கொண்டது.

- Advertisement -

அந்த போட்டியில் ஷான் பொல்லாக் வீசிய 5-வது ஓவரில் கோல்டன் டக் ஆகி தினேஷ் கார்த்திக் திரும்பினார். அந்த போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 40 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களுடன் அரைசதத்தை கடந்தார். தோனியுடன் இணைந்து ரோஹித் அமைத்த 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் காரணமாக இந்திய அணி நல்ல ரன் குவிப்பை வழங்கியது. இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த அந்த சம்பவம் குறித்து கார்த்திக் கூறுகையில் :

rohith 2007

ரோகித் சர்மாவின் முதல் சர்வதேச அரைசதம் எனது பேட்டில் இருந்து வந்ததை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அந்த போட்டியில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதும் என்னுடைய பேட்டை பார்த்து திட்டினேன். அதற்கு ரோகித் சர்மா என்னிடம் : இந்த பேட்டில் என்ன குறை இருக்கிறது ? இந்த பேட் நன்றாக இல்லை என நினைக்கிறீர்களா ? என்னிடம் கொடுங்கள் என்று எனது பேட்டை வாங்கிக்கொண்டு மைதானத்திற்கு பேட்டிங் செய்ய களம் இறங்கினார்.

- Advertisement -

karthik 1

நானும் என்னுடைய பேட்டை கொடுத்து அனுப்பினேன். அந்த போட்டியில் தென்ஆப்ரிக்க வீரர்களின் பந்துவீச்சு சிறப்பாக எதிர்கொண்ட ரோகித் அரை சதம் அடித்து இந்திய அணியின் ரன் குவிப்பை 153 ஆக்கினார் என கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 116 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement