- Advertisement -
ஐ.பி.எல்

நான் பேட்டிங் பண்ண உள்ள போகும்போதே அந்த முடிவை எடுத்துட்டேன் – ஆட்டநாயகன் தினேஷ் கார்த்திக் அதிரடி

ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளேசிஸ் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 70 ரன்களையும், ஹெட்மயர் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதனைத்தொடர்ந்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பெங்களூரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சற்று கடினமான இலக்கை துரத்திய பெங்களூரு அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் 10 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் பெங்களூரு அணி நிச்சயம் இந்த போட்டியில் தோற்றுவிடும் என்று நினைத்த வேளையில் களம் இறங்கிய தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் மற்றும் சபாஷ் அகமது ஜோடி சிறப்பாக விளையாடி பெங்களூரு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

- Advertisement -

குறிப்பாக அவர்கள் இருவரும் சரமாரியாக ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்க பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சார்பாக சபாஸ் அகமது 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளைச் சந்தித்த வேளையில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் என 44 ரன்கள் அடித்து இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத இந்த ஒரு போட்டியில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் பெங்களூர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் போட்டி முடிந்து இந்த வெற்றி குறித்தும் தனது ஆட்டம் குறித்தும் பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் நிச்சயம் என்னுடைய ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவான எண்ணத்தில் இருந்தேன். ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் எனக்கு சரியானதாக அமையவில்லை. எனவே நிச்சயம் இந்த ஆண்டு என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி என்னை நானே திருப்தி செய்ய நினைத்தேன்.

- Advertisement -

அதோடு எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை என்பதை எனக்கு நானே உறுதிப்படுத்தி கொள்ளவேண்டும் என்பதற்காகவும் சிறப்பாக ஆடினேன். நான் களம் இறங்கும் போது ஓவருக்கு 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இதுபோன்ற கடினமான சூழ்நிலையை சமாளித்து விளையாட நான் நிறைய பயிற்சி எடுத்திருக்கிறேன். எனவே பதட்டப்படாமல் அமைதியாக இருந்து அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : சோகத்தில் இருப்பவருக்கு மேலும் சோதனை! மொய்ன் அலி போல விசா பிரச்சனையில் சிக்கிய நட்சத்திர இந்திய வீரர்

அதோடு எனது விக்கெட் விழுந்தால் பின்னால் வருபவர்கள் சிரமப்படுவார்கள் என்பதனால் நிச்சயம் இறுதிவரை நின்று போட்டி முடித்துக் கொடுக்க நினைத்தேன். அதன்படி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதில் மகிழ்ச்சி என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by