மொத்தமா 100 அடிக்கவே கஷ்டப்படுறாங்க.. இப்போவும் விராட் கோலி அதை செய்வாருன்னு சத்தியம் பண்றேன்.. டிகே ஆதரவு

Dinesh Karthik 5
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் 3 போட்டிகளில் அசத்தத் தவறியது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் கடந்த 2023 உலக கோப்பையில் 765 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த அவர் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதே வேகத்தில் 2024 ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

அதனால் இந்த டி20 உலகக் கோப்பையிலும் விராட் கோலி அதிக ரன்கள் குவித்து சாதனை படைப்பார் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்தனர். ஆனால் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1, 4, 0 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தார். அவருடைய இந்த தடுமாற்றத்திற்கு துவக்க வீரராக களமிறங்கியதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

டிகே சத்தியம்:
ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பைகளில் 3வது இடத்தில் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்த அவர் 2 தொடர்நாயகன் விருதுகளையும் வென்றார். ஆனால் இம்முறை துவக்க வீரராக களமிறங்கிய அவர் கேரியரில் முதல் முறையாக டக் அவுட்டாகியுள்ளார். அதனால் மீண்டும் அவர் 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் சவாலான நியூயார்க் பிட்ச்சில் மொத்த அணியும் சேர்ந்து 100 ரன்கள் அடிப்பதற்கே திண்டாடியதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அங்கே முதல் போட்டியை தவிர்த்து ரோகித் சர்மாவும் அசத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். எனவே வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் விராட் கோலி அசத்துவார் என்று சத்தியம் செய்வதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோகித் முதல் போட்டியில் 50 ரன்கள் அடித்தார். அதைத் தவிர்த்து இது போன்ற பிட்ச்களில் அவரால் எவ்வளவு அடிக்க முடியும்? சொல்லப்போனால் மொத்த அணியும் சேர்ந்து அங்கே 100 ரன்கள் அடிக்கிறது. எனவே விராட் கோலியை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அவர் முக்கிய நேரத்தில் அடிப்பார். அவர் எப்போதும் உலகக் கோப்பையில் அசத்தாமல் இருந்ததில்லை”

இதையும் படிங்க: ஐபிஎல் வேற இந்தியா வேற.. கம்பீர் பயிற்சியாளராக வந்தா இதை தவற விட்றக்கூடாது.. கும்ப்ளே அட்வைஸ்

“இந்த உலகக் கோப்பையிலும் அவரைப் பற்றி நீங்கள் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. 100% அவர் அசத்துவார். நேரம் வரும் போது விராட் கோலி அங்கே இருப்பார். தற்போது நாம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளோம். எனவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சென்றதும் அவர் அதிரடியாக விளையாடுவார் என்று நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement