டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்த 2 அணிகளே மோதும் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

Karthik
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை தொடரானது இங்கு நிலவிய கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. மேலும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள், தகுதி சுற்றில் பங்கேற்கும் அணிகள் என அனைத்து விவரங்களையும், அட்டவணைகளையும் தெளிவாக வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த உலகக் கோப்பை தொடரானது அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Cup

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என இரண்டு முக்கிய போட்டிகளுக்கும் ரிசர்வே உண்டு என்று ஐசிசி அறிவித்துள்ளது. ஏனெனில் மழை காரணமாக ஆழத்து வேறு காரணங்களாலோ போட்டி தடைபட்டால் ரிசல்ட் டேவில் மீண்டும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் துவங்க இன்னும் இரு மாத காலம் உள்ள நிலையில் அந்த தொடர் குறித்த கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும், நிபுணர்களும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வீரரான தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்லும் இரு அணிகள் குறித்து பேசியுள்ளார்.

ind

இதுகுறித்து அவர் பேசுகையில் : இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தான் என்னை பொருத்தவரை இறுதிப் போட்டியில் விளையாடும். ஏனெனில் இந்திய அணி தற்போது பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. அதே போன்று இந்திய அணிக்கு அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி தான் உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது .

Lewis

ஏனெனில் அந்த அணியில் அனுப்பவம் வாய்ந்த வீரர்களும், இளமையான வீரர்களும் இருப்பதால் நல்ல பலமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தான் இறுதி போட்டியில் விளையாடும் குறிப்பிடத்தக்கது.

Advertisement