நான் சந்தித்ததில் இவரே டேஞ்சர் பவுலர். இவரோட பவுலிங்குக்கு எதிரா பேட்டிங் பண்றது கஷ்டம் – தினேஷ் கார்த்திக்

karthik
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச அணியில் அறிமுகமானார். தினேஷ் கார்த்திக் மூன்று விதமான வடிவங்களிலும் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். கார்த்திக் மூன்று விதமான போட்டிகளிலும் சேர்த்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கிறார். டெஸ்ட் தொடரில் 129 ரன்களை குவித்தார், இதுவே அவரது அதிகபட்ச ரன்களாக இருக்கிறது.

- Advertisement -

அது மட்டுமின்றி இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தார். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர், குஜராத், கொல்கத்தா ஆகிய அனைத்து அணிகளிலும் விளையாடி இருக்கிறார். மேலும் தற்போது நடைபெற இருக்கும் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாட்டு அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

இந்நிலையில் தமிழகத்தை சார்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு சிறப்பாக பதிலளித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்த ரசிகர் ‘உங்களைத் திணற வைத்த பந்துவீச்சாளர்கள் யார் ?’என்று கேட்டார். இதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தான் என்னை மிகவும் திணற வைத்தவர் என்று கூறியுள்ளார்.

karthik

மேலும் பேசிய தினேஷ் கார்த்திக் “ லசித் மலிங்கா சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் ஒரு திறமையான மற்றும் துல்லியமான பந்துவீச்சாளராக திகழ்கிறார். பேட்ஸ்மேன்கள் மலிங்காவின் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு திணறுவார்கள்” என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்
லசித் மலிங்கா மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் பலமுறை எதிர் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

malinga

தினேஷ் கார்த்திக் 53 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்த போது இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக லசித் மாலிங்க விளையாடினார். அப்போது மலிங்காவை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் 3 முறை தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement