- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய டெஸ்ட் அணியின் 3 ஆம் இடத்தில் விளையாட அவர்தான் சரியான ஆள் – தினேஷ் கார்த்திக் கருத்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாளை ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

3 ஆம் இடம் அவருக்கு தான் சரியாக இருக்கும் : தினேஷ் கார்த்திக்

இதன் காரணமாக அவர்களுக்கு பதிலாக அந்த இடத்தை நிரப்பப்போகும் வீரர்கள் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரோஹித் சர்மாவின் இடத்திற்கு கே.எல் ராகுல் இறங்குவார் என்று உறுதியாகி உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் விராட் கோலியின் நான்காவது இடத்திற்கு சுப்மன் கில் விளையாடுவதும் கிட்டத்தட்ட உறுதி. அதன் காரணமாக சுப்மன் கில் விளையாடி வந்த மூன்றாவது இடத்தில் யார் விளையாட போகிறார்கள்? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் மூன்றாம் இடத்தில் விளையாட தமிழக வீரர் சாய் சுதர்சன் தான் சரியான ஒரு தேர்வு என இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஜெய்ஸ்வால் எப்போதும் சவாலுக்கு தயாராக இருக்கும் ஒரு வீரராகவே இருக்கிறார். எனவே அவர் துவக்க வீரராக விளையாடி சாய் சுதர்சன் மூன்றாவது இடத்தில் விளையாடினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

இந்திய அணியில் ஏற்கனவே கிடைத்த சில வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள சாய் சுதர்சன் நிச்சயம் டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். ஏற்கனவே சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோருக்கு இடையே நல்ல இணைப்பு இருப்பதால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரால் சாதித்துக் காட்ட முடியும்.

இதையும் படிங்க : 2007 தோனி மாதிரி இந்தியாவுக்கு அட்வான்டேஜ் கிடைச்சுருக்கு.. 1971 மாதிரி சர்ப்ரைஸ் பண்ணுவாங்க.. ராமன் நம்பிக்கை

அதேபோன்று எட்டாவது இடத்தில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் சரியான வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதனால் நிறைய ஓவர்கள் பந்து வீசுவது மட்டுமின்றி அவரால் பேட்டிங் செய்ய முடியும் என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -