இதுதான் என்னுடைய சிறந்த ஐ.பி.எல் லெவன் அணி. தோனிக்கே இடமில்லை – அதிரவைத்த தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 12 ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளது.இந்த அனைத்து அணிகளிலும் போட்டியை முற்றிலும் மாற்றக்கூடிய சிறந்த வீரர்கள் இருந்துள்ளனர்.

Karthik

- Advertisement -

இதனை வைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தற்போது ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் 6 அணிகளில் விளையாடியவர். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஆனால் தமிழகத்தை சேர்ந்த வீரரான இவர் இதுவரை சி.எஸ்.கே அணிக்காக விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தேர்வு செய்த இந்த அணியில் துவக்க வீரர்களாக விரேந்தர் சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் விராட் கோலியும் நான்காவது இடத்தில் ரோகித் சர்மாவும் வருகின்றனர். விக்கெட் கீப்பராக தன்னைத் தானே தேர்வு செய்து கொண்டார் தினேஷ் கார்த்திக்.

Gautam Gambhir

அதன் பின்னர் ஆல்-ரவுண்டராக அன்ரே ரஸல் சுழற்பந்து வீச்சாளர்களாக சுனில் நரேன் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், வேகப்பந்து வீச்சாளர் க்லென் மெக்ராத் மெக்ராத், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்த அணியில் சிறந்த விக்கெட் கீப்பர் டோனிக்கு பதிலாக தன்னைத்தானே தேர்வு செய்து கொண்டார்.

- Advertisement -

இதில் குறிப்பிடத்தகுந்த மாற்றமாக சென்னை அணிக்காக 3 முறை கேப்டனாக கோப்பையை ஜெயித்து கொடுத்த தோனிக்கு இடம் கொடுக்கவில்லை. மேலும் தன்னை தானே விக்கெட் கீப்பராகவும் அவர் தேர்வு செய்துகொண்டார். தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் கடந்த 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் டெல்லி அணிக்காகவும், 2012, 2013ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் அதனை தொடர்ந்து 2015 பெங்களூர் அணிக்காகவும், 2016 மற்றும் 2017 குஜராத் லயன்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.

Karthik

அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதனை தொடர்ந்து தற்போது வரை கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் இவர் சென்னை அணிக்காக தான் விளையாட முடியாதது குறித்து வருத்தமும் தெரிவித்துள்ளார்.

Advertisement