என்கிட்ட அந்த திறமை இருக்கு…ஆனால் அது நடக்குமா ? – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் !

karthik
- Advertisement -

சதமடிக்கும் திறமை என்னிடம் உள்ளது ஆனால் எனக்கு சதமடிப்பதை விட இறுதியில் களமிறங்கி அணியை வெற்றிபெற வைப்பது தான் மிகவும் பிடிக்கும் என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.

karthik

- Advertisement -

தினேஷ் கார்த்திக், இதுவரை நடந்து முடிந்த 10 ஐபில் தொடர்களிலும் 6 அணிகளில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் 14 அரை சதங்களை பூர்த்தி செய்துள்ளார். மேலும் இதுவரை ஆடிய ஐபில் தொடர்களில் 160 போட்டிகளில் விளையாடி 3138 ரன்களை பெற்றுள்ளார். ஆனால் இதுவரை ஒரு சதம் கூட அவர் அடித்தது இல்லை.

இதைப்பற்றி சமீபத்தில் ஸ்டார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த போது அவர் கூறியதாவது” மற்ற வீரர்களை போல சதமடிக்க எனக்கும் ஆசை தான், அதற்கான திறமையும் என்னிடம் உள்ளது. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக அணியில் இறங்கி சதமடிப்பதை விட இறுதியில் நின்று ஆடி அணியை வெற்றிபெற செய்யும் ஒரு சிறந்த ஆட்டக்காரராகவே இருக்க எனக்கு பிடித்திருக்கிறது “என்று தெரிவித்திருந்தார்.

Dinesh

மேலும் நடந்து வரும் ஐபில் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய இவர் 235 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் இவர் அதிகப்படியாக அதிக ரன் 43 மட்டும் தான்.இந்த தொடரில் கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக் அணியின் மிடில் ஆர்டரில் தான் இறங்குகிறார் என்பதும் இதில் கவனிக்க படவேண்டிய விஷயம்.

Advertisement