இதெல்லாம் நியாயமா? முதலில் ரிஷப் பண்ட்டுக்கு போதுமான சான்ஸ் கொடுங்க – விமர்சனங்களுக்கு டிகே கொடுக்கும் பதிலடி என்ன

Rishabh Pant Dinesh karthik
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. தலைநகர் டாக்காவில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி 186 ரன்களுக்கு சுருண்ட இந்தியா பந்து வீச்சில் போராடி வங்கதேசத்தின் 9 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை உறுதி செய்தது. ஆனால் கடைசி நேரத்தில் கேஎல் ராகுல் நழுவ விட்ட கேட்ச்சை பயன்படுத்தி டெத் ஓவர்களில் சுமாராக செயல்பட்ட இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்ட மெஹதி ஹசன் 38* (39) ரன்கள் விளாசி இந்தியாவிற்கு தலை குனியும் தோல்வியை பரிசளித்தார்.

Rohit-and-Pant

- Advertisement -

மறுபுறம் டெயில் எண்டர்கள் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு சொதப்பிய இந்தியா இத்தொடரை வெல்ல எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் 4 ஆல் ரவுண்டர்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார். அந்த இடத்தில் விளையாடும் ரிஷப் பண்ட் இத்தொடரிலிருந்து காயத்தால் மொத்தமாக வெளியேறியது நிறைய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

இதெல்லாம் நியாயமா:

ஏனெனில் அறிமுகமான 2017 முதல் 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் 30 போட்டிகளில் களமிறங்கி கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் அசத்தியதில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் அவரை உருவாக்க நினைக்கும் அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது.

DK and Pant

ஆனால் ராஜா வீட்டுப் பிள்ளையை போல் அதை அனைத்தையும் வீணடித்து வரும் அவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு காலம் காலமாக தவமாய் காத்து கிடக்கும் சஞ்சு சாம்சனுக்கு இந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருந்தும் கொடுக்கப்படாதது ஏன்? என்று ஏராளமான விமர்சனங்கள் நிலவுகின்றன. அதனாலேயே காயம் என்ற பெயரில் அவரை கழற்றி விட்டு 2023 உலக கோப்பையில் கேஎல் ராகுலை மிடில் ஆர்டர் பேட்ஸ்மெனாகவும் விக்கெட் கீப்பராகவும் பயன்படுத்தும் வேலையை அணி நிர்வாகம் துவங்கியுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் தனித்துவமான திறமை கொண்ட ரிசப் பண்டுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுங்கள் அதில் அவர் சொதப்பும் பட்சத்தில் கழற்றி விடுங்கள் என்று தினேஷ் கார்த்திக் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த விவாதத்தை நாம் தனியாக பார்க்க வேண்டும். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 10 இன்னிங்ஸில் 45 என்ற நல்ல சராசரியை கொண்டுள்ள ரிசப் பண்ட் சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் 125 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். எனவே அவர் தனக்காக மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். என்னை பொறுத்த வரை முதலில் அவருக்கு நீங்கள் நிலையான வாய்ப்புகளை கொடுங்கள்”

Dinesh-Karthik-1

“அதில் அவர் சிறப்பாக செயல்படாவிட்டால் பின்னர் அவரிடமிருந்து நகர்ந்து வேறு ஒருவரிடம் செல்லுங்கள். ஆனால் அவரிடமிருந்து நீங்கள் எளிதில் நகர்ந்து செல்ல முடியாது. ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசாத்தியமான சாதனைகளை செய்துள்ளார். எனவே அவரிடமிருந்து நகர்ந்து செல்வது நியாயமற்றதாகும். மேலும் டி20 கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் அவரை விட சிறப்பாக செயல்பட்டு காத்திருப்பதால் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படவில்லை என்று சொல்வார்கள். இருப்பினும் அந்த கோணத்தில் நாம் பார்க்க கூடாது” என்று கூறினார்.

இதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி கூறுவது உங்களுக்கு நியாயமா என்று பதிலடி கொடுக்கிறார்கள். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தி விட்டார் என்ற காரணத்துக்காக ரிஷப் பண்ட்டுக்கு கிடைத்த வாய்ப்பு கடந்த 3 வருடங்களில் சஞ்சு சாம்சன் உட்பட வேறு எந்த வீரருக்கும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடப்பட்டது.

Advertisement