இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப் கோப்பைகளை ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மிடில் ஆர்டரில் 17000+ ரன்கள் தெரிவித்துள்ள அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதனால் சிறந்த ஃபினிஷராக போற்றப்படும் அவர் இந்தியாவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக அறியப்படுகிறார்.
சொல்லப்போனால் இந்திய விக்கெட் கீப்பர்களை தோனிக்கு முன் பின் என்று 2 வகையாக பிரிக்கலாம். ஏனெனில் 2004இல் கீப்பராக அறிமுகமான தோனி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் இந்திய கீப்பர்கள் என்றால் பந்தை பிடித்து போடுபவர்களாக மட்டுமின்றி பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவித்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலையை தோனி உருவாக்கினார்.
தோனியின் அறிமுகம்:
இந்நிலையில் 2002 – 2003 காலங்களில் கீப்பிங் செய்த ராகுல் டிராவிட் இனிமேலும் தம்மால் கீப்பராக செயல்பட முடியாது என்று சொன்னதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அப்போது கென்யாவில் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்த தோனிக்கு வாய்ப்பு கிடைத்ததாக கார்த்திக் தெரிவித்துள்ளார். நாளைடைவில் கேப்டனாக வெற்றிகளைக் குவித்த தோனி நிரந்தர இடத்தைப் பிடித்ததால் தமக்கு விருந்தினரைப் போல் மட்டுமே வாய்ப்பு கிடைத்ததாகவும் கார்த்திக் கூறியுள்ளார்.
இது பற்றி கார்த்திக் பேசியது பின்வருமாறு. “ஆரம்பக் காலங்களில் தோனி விளையாடியதை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால் கென்யாவில் நடந்த இந்தியா ஏ தொடரின் போது அனைவரும் புதுமையைக் கொண்டு வந்த ஒரு வீரரை மட்டுமே பேசினார்கள். அவர் பந்தை பவராக அடிக்கும் விதத்தை இதற்கு முன் பார்த்ததில்லை என்று அனைவரும் சொன்னார்கள். சொல்லப்போனால் சிலர் அவரை பெரிய சிக்ஸர்களை அடிக்கக்கூடிய கேரி சோபர்ஸ் உடன் ஒப்பிட்டு பேசினார்கள்”
விருந்தினரான டிகே:
“எம்எஸ் தோனி மிகவும் வித்தியாசமான டெக்னிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் மக்கள் பார்த்த மற்ற வீரர்களைக் காட்டிலும் பந்தை மிகவும் கடினமாக அடித்தார். அதுவே அந்த சமயத்தில் பேச்சாக இருந்தது. அந்த சமயத்தில் ராகுல் டிராவிட்டை இந்தியா விக்கெட் கீப்பராக பயன்படுத்தியது. ஆனால் ஒரு கட்டத்தில் “பாஸ் கீப்பிங் செய்வதால் எனது உடல் பாரமாகி விட்டது. எனவே நான் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என்ற நிலையை டிராவிட் எட்டி விட்டார்”
இதையும் படிங்க: பஞ்சாப் மாதிரி எனக்கு அந்த 2 சுதந்திரத்தை கொடுக்கல.. கொல்கத்தா விட்டு வெளியேறியது பற்றி ஸ்ரேயாஸ்
“அதனால் இந்திய அணி வேறு விக்கெட் கீப்பரை பார்க்கத் துவங்கினார்கள். அப்போது திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் வருவது போல் நான் அணிக்குள் வந்தேன். ஆனால் முதன்மை கதாபாத்திரமாக எப்போதும் தோனி இருந்தார். அவர் இந்தியாவை மட்டும் ஈர்க்கவில்லை அனைவரையும் ஈர்த்தார். மிக விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் அலைகளை உருவாக்கினார்” என்று கூறினார்.



