ஆப்கான் டெஸ்ட்..! இந்திய அணியில் தமிழக வீரர்க்கு வாய்ப்பு..! – யாருக்கு தெரியுமா..?

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் டெஸ்ட் தொடரை உலக சாம்பைனான இந்தியாவுடன் மோத போகிறது அபிகினிஸ்தான் அணி. இந்த போட்டியில் இந்திய அணியை பிரபல இந்திய வீரர் ரஹானே கேப்டனாக பொறுப்பேற்று வழி நடத்தவுள்ளார்.
saha

கிரிக்கெட் உலகில் எடுத்துக் கொண்டால் நீண்ட வருடங்களாக ஒரு சில நாடுகள் மட்டுமே சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றது. மேலும் டெஸ்ட் அங்கீகாரம் என்பதெல்லாம் ஐ.சி.சி அவ்வளவு எளிதாக வழங்கிவிடாது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு கடந்த ஆண்டு டெஸ்ட் அங்கீகாரத்தை வழங்கியது ஐ.சி.சி.

- Advertisement -

டெஸ்ட் அங்கீகாரத்தி வாங்கிய ஆப்கானிஸ்தான் அணி வரும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி இந்திய அணியுடன் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட இந்தியா வருகிறது. மேலும் அந்த போட்டியில் இந்திய அணி சார்பில் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் தற்போதைய டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக இருக்கும் அஜிங்கிய ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானுடன் இது முதல் டெஸ்ட் போட்டி என்பதால் அனைவரையும் இளம் வீரர்களாக போடுவது சரியாக இருக்காது. அதனால அணியில் யாரெனும் அனுபவமிக்க ஆட்டக்காரர்களாக இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று எண்ணி ரஹானே ஏற்கனவே டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக இருந்த ரஹானாவை இந்த தொடரில் கேப்டனாக நிர்னையிக்க தேர்வுக்குழு முடிவு செய்தது.
dinesh-karthik-bcci

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த விருதிமன் ஷாவிற்கு பெரு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது. இதனால் இவருக்கு பதிலாக இந்த போட்டியின் கீப்பராக தினேஷ் கார்த்திக் அல்லது பார்த்திவ் படேல் நிர்ணயிக்கபடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது

Advertisement