இந்த விடயத்தில் நான் தோனியை எப்போதும் பின்பற்றி வருகிறேன் – தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

Karthik
- Advertisement -

விஜய் ஹசாரே கோப்பை தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு அணி தொடர்ந்து 9 வெற்றிகளை குவித்து அசத்தியுள்ளது. தமிழ்நாடு அணியின் கேப்டனாக தற்போது தினேஷ் கார்த்திக் செயல்பட்டு வருகிறார்.

Karthik-1

- Advertisement -

மேலும் இந்த தொடரில் கேப்டனாக மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெங்கால் அணிக்கு எதிராக 62 பந்துகளில் 97 ரன்களை விளாசிய தினேஷ் கார்த்திக் மத்தியப்பிரதேச அணிக்கு எதிராக 28 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அதிரடியில் மிரட்டினார். உலகக் கோப்பை டி20 தொடர் நெருங்கும் வேளையில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டம் அவரைத் தேர்வு செய்ய வைக்கும் அளவிற்கு கவனிக்க வைத்துள்ளது.

இதுபற்றி தினேஷ் கார்த்திக் கூறும்போது : அணியில் முதல் நான்கு வரிசைகளில் இறங்கி பேட் செய்து எப்போது வேண்டுமானாலும் அதிரடியாக ஆடமுடியும் ஆனால் கடைசி கட்ட ஓவர்களில் அணி அழுத்தத்தில் இருக்கும் போது ரன் குவிப்பது என்பது ஒரு சவாலான விடயமாகும். அந்த சவால் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மேலும் அதனை நான்மகிழ்ச்சியாக செய்து வருகின்றேன்.

Karthik

தோனி இதைத்தான் இந்திய அணிக்காக பல வருடங்களாக கடைசி நேரத்தில் அணி அழுத்தத்தில் இருக்கும்போது இறங்கி அதிரடியாக ரன் குவித்து வெற்றி பெற வைத்து வருகிறார். அவரை பின்பற்றி அதனைப் போன்றே நானும் ஆசிய கோப்பை போட்டியின் போதும் சமீபத்தில் நடந்த டி20 தொடர்களிலும் நான் அப்படியே அதிரடியாக விளையாடி வருகிறேன். சிறந்த பினிஷர் என்று சொல்வதில் எனக்கு மகிழ்ச்சிதான் என்று தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement