- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக். அடுத்ததா என்ன பண்ணப்போறாரு தெரியுமா?

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இன்றளவும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

அதேபோன்று கடந்த 2008-ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் அறிமுகமான தினேஷ் கார்த்திக் கடைசியாக நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார்.

- Advertisement -

அந்தவகையில் ஐபிஎல் தொடரில் 257 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 4842 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்னும் அவர் ஓய்வை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறிய தினேஷ் கார்த்திக் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார்? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் வழக்கம் போலவே தனது வர்ணனையாளர் பணியை மேற்கொள்ள உள்ளார். அதாவது ஏற்கனவே அவர் வர்ணனையாளராக அப்போது பணியாற்றி வந்த அனுபவம் உடையவர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது எதிர்வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வர்ணனையில் ஈடுபட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரானது ஜூன் மாதம் துவக்கத்தில் ஆரம்பிக்கப் போகும் வேளையில் ஐசிசி வெளியிட்டுள்ள வர்ணனையாளர் குழு பட்டியலில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ இந்திய அணியில் ஓட்டையிருக்கு.. முடிஞ்சதும் ருதுராஜ், அபிஷேக்கை கொண்டு வாங்க.. சைமன் டௌல்

ஐசிசி வெளியிட்ட இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் ஏற்கனவே பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் வர்ணனையாளராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் இம்முறையும் வர்ணனையில் அசத்துவார் என்பது உறுதி.

- Advertisement -