தினேஷ் கார்த்திக் உபயோகிக்கும் 21 ஆம் நம்பருக்கு பின் ஒளிந்திருக்கும் சீக்ரெட் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

DK
- Advertisement -

தினேஷ் கார்த்திக் தோனிக்கு முன்னரே அறிமுகமாகி தற்போது வரை இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் தவித்து வருபவர். 2003 ஆம் ஆண்டு அறிமுகமானவர். 17 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் உள்ளேயும், வெளியேயும் ஆடிக் கொண்டிருக்கிறார். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார்.

ஆனால் இவருக்கு தற்போது வரை அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. தற்போது 33 வயதான அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கும் வேட்கையை விட்டுவிடவில்லை. தொடர்ந்து போராடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் எப்போதும் அடித்து துவம்சம் செய்து வருகிறார். சென்ற வருடம் இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு இறுதிப் போட்டியில் கூட கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தவர். அந்த போட்டியில் மட்டும் 8 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் அவர் அணிந்து வரும் ஜெஸ்ஸியின் பின்னால் 21 என்ற எண் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த எண்ணிற்கு காரணம் என்ன என்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்.. தனது மனைவி தீபிகா பல்லிக்களின் பிறந்தநாள் தேதி 21. ஆகவே அதனை எனது ஜெர்ஸி எண்னாக பயன்படுத்தி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

karthik-pallikal

தீபிகா பள்ளிகள் உலகின் மிகச் சிறந்த ஸ்குவாஷ் வீராங்கணை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 94 ஒருநாள் போட்டிகளிலும், 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Karthik

மொத்தம் ஒரு சதம் இரண்டு அரை சதங்கள் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 9 அரை சதங்களும் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 143 என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வகையான போட்டிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 3000 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளிலும் 3654 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement