இத்தனை வருடம் கிரிக்கெட் விளையாடியும் இப்படியா பண்ணுவீங்க ? மோசமான சாதனையை படைத்த – தினேஷ் கார்த்திக

karthik

இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவ்வப்போது இந்திய அணிக்குள் வரும் கார்த்திக் ஒருசில வாய்ப்புகளைப் பெற்று மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட செல்வது வழக்கம்.

Karthik-1

இருப்பினும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் இவர் பலமுறை தன்னை நிரூபித்தும் இருக்கிறார். சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்து இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்திய அணியில் விளையாடாமல் இருக்கும் இவர் தமிழ்நாடு அணிக்காக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி நடந்த தமிழ்நாடு அணி மோதிய போட்டியில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி 41 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ரன்களை குவித்து அசத்தினார். இருப்பினும் அந்த போட்டியில் ஹிட் அவுட் முறையில் வெளியேறிய அவர் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறினார்.

Karthik

அந்த மோசமான சாதனை யாதெனில் லிஸ்ட் ஏ போட்டிகள், முதல் தரப் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று வகையான போட்டிகளிலும் ஹிட்அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனையை தினேஷ் கார்த்திக் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -