மீண்டும் டஃப் கொடுக்கும் தினேஷ் கார்த்திக். தலையை பிச்சிகொள்ளும் தேர்வுக்குழு – விவரம் இதோ

Karthik-1
- Advertisement -

இந்திய அணியில் பல வருடங்களாக நிலையான இடம் இல்லாமல் தவித்து வருபவர் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். கடைசியாக உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெற்றவர் அந்த தொடரில் சிறப்பாக விளையாட காரணத்தால் அணியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டார்.

Karthik

- Advertisement -

ஆனால் தொடர்ந்து அவர் உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவ்வப்போது இந்திய அணியில் இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்தியாவில் விஜய் ஹசாரே கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

தினேஷ் கார்த்திக் தற்போது நடைபெற்ற மூன்று போட்டியிலும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். முதல் போட்டியில் 62 பந்துகளில் 97 ரன்களும், இரண்டாவது போட்டியில் 91 பந்துகளில் 95 ரன்களையும் மூன்றாவது போட்டியில் 52 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

Karthik

இதனால் மீண்டும் ஒருமுறை அவர் இந்திய அணியின் மிடில் ஆர்டர் தேர்விற்கு தனது தேர்வை தேர்வு குழுவினரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். ஏற்கனவே ராகுல், விஜய் சங்கர் என வீரர்கள் அசத்திவர தற்போது தினேஷ் கார்த்திக்கும் அந்த பட்டியலில் இருந்து தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தேர்வுக்கு தினேஷ் கார்த்திக் எடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement