சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் இந்திய வீரர்களுக்கு என பல கோடி ரசிகர்கள் உண்டு என்பது மறுக்கப்படாத உண்மை. ஏனெனில் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை இந்திய வீரர்களின் ரசிகர்களாக கோடிக்கணக்கானோர் இருந்து வருகின்றனர். குறிப்பாக கபில் தேவ், கவாஸ்கர் காலத்தில் ஆரம்பித்த இந்திய வீரர்களின் ஆதிக்கம் சச்சின், கங்குலி, டிராவிட் என தொடர்ந்து வந்தது.
இந்த ஜாம்பவான் வரிசை தற்போது தோனி, கோலி, ரோஹித் என நீண்டு கொண்டும் வருகிறது. அதோடு மட்டுமின்றி எதிர்கால ஜாம்பவான்களாக பார்க்கப்படும் இளம் நட்சத்திர வீரர்கள் தற்போது ஜொலிக்க துவங்கி உள்ளனர்.
அந்த வகையில் பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் இன்று உலகளவில் பார்க்கப்படும் விளையாட்டாக மாறி உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை எந்த ஒரு வீரரை கேட்டாலும் மற்றொரு இந்திய வீரரை பிடித்தமான வீரர் என்று கூறி அவர்களுடைய மறக்க முடியாத ஒரு ஆட்டத்தை நிச்சயம் நினைவு கூறுவார்கள்.
அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல ஜாம்பவான்கள் வீரர்கள் விளையாடி இருந்தும் அதிக ரசிகர்கள் பார்த்து ரசித்த வீடியோவாக தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்த வீடியோ ஒன்று தற்போது சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தினேஷ் கார்த்திக்கின் வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் :
2018 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற நிதாஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர் சேசிங் செய்த வீடியோ அதிக பார்வைகளை பெற்ற வீடியோவாக சாதனை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பைக்கு தயாராகும் வகையில் பாண்டியா எடுத்த ஸ்பெஷல் பயிற்சி – ரோஹித் மற்றும் டிராவிட் கொடுத்த டிரில்
அப்போது தினேஷ் கார்த்திக் 19ஆவது ஓவரில் 22 ரன்களையும், 20-வது ஓவரில் 12 ரன்கள் அடித்து அசத்தலான வெற்றிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் சிக்சர் அடித்து கார்த்திக் அந்த போட்டியை முடித்துக் கொடுத்திருந்தார். இந்த வீடியோ தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்கள் (23.4 கோடி பேர்) பார்த்த வீடியோவாக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



