நான் இப்படி பேசனத்துக்காக என் அம்மாவும், மனைவியும் திட்டுனாங்க – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை தொடர்ந்து இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் நடைபெற்று ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடருக்கு பின்னர் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட அவர் தனது முதல் போட்டியிலேயே வர்ணனையாளராக ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பையும், பாராட்டையும் பெற்றார்.

Karthik

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளிலும் வர்ணனை செய்து வரும் அவர் இங்கிலாந்து அணி விளையாடிய இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் தங்களது பேட்டை விரும்புவதில்லை அடுத்தவர்களின் பேட்டை தான் விரும்புகிறார்கள் என்றும் பேட் என்பது அடுத்தவர்களின் மனைவி போன்றது என ஒரு சர்ச்சையான கருத்தை வர்ணனையின் போது கூறியிருந்தார்.

அவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும் தினேஷ் கார்த்திக் மீது கண்டனங்களும் எழுந்தன. இந்நிலையில் தான் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவ்வாறு பேசியதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என வெளிப்படையான கருத்து ஒன்றினை கார்த்திக் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

karthik 1

உண்மையில் நான் அந்த போட்டியில் பேசும் போது எந்தவித உள்நோக்கத்துடனும் அப்படி பேச வில்லை. இருந்தாலும் நான் பேசியது தவறுதான் இதற்காக உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிச்சயமாக என்னுடைய அந்த வார்த்தை சரியானது இல்லை அல்ல இதே போன்று மீண்டும் நடக்காது என்றும், இப்படித்தான் பேசியதற்காக தனது மனைவியும் அம்மாவும் கடுமையாகச் சாடினார்கள் என்றும் தினேஷ் கார்த்திக் ரசிகர்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

Karthik

ஏற்கனவே சமூக வளைதளத்தில் பேசும்போது பார்த்து வீசவேண்டும், சர்வதேச அளவில் விளையாடி வரும் வீரர்கள் தேவை இல்லாத வார்த்தைகளை உதிர்க்க கூடாது என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கூறியிருந்தனர். அது மட்டுமின்றி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் இதேபோன்று பெண்கள் குறித்த சர்ச்சையான வார்த்தைகளை விட்டு தான் அணியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement