தினேஷ் கார்த்திக்கு வந்த புதிய சிக்கல்.! அணியில் இடம் பெறுவாரா..? மிடில் ஆர்டரை ஆக்ரமித்த அதிரடி வீரர்கள்..!

Advertisement

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை கைபற்றிய இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு நாள் போட்டியை அடுத்து டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கிற்கு புதிய சிக்கல் தோன்றியுள்ளது.

dinesh
dinesh

இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது. இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விர்த்திமான் சாஹா இடம்பெற்றிருந்தார். ஐபிஎல் போட்டியின் போது பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சாஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் இந்த தொடரில் ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் மொஹமத் சமி ‘யோ யோ டெஸ்டில் தேர்ச்சியடையாமல் இருந்ததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் “யோ யோ” தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளதால், இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல தயராக உள்ளார்.

- Advertisement -

samistand

நிதாஸ் கோப்பை போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் சேர்க்கப்பட்டும் அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கபடமால் தான் இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ரெய்னா, கே எல் ராகுல் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இவரது இடத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில்,தற்போது வேக பந்து வீச்சாளர் மொஹமத் சமியால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement