சிராஜ் போகப்போக இதை கற்றுக்கொள்வார். அவர் பண்றது ரொம்ப தப்பு – தினேஷ் கார்த்திக் கொடுத்த அட்வைஸ்

Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. கடைசி நாளின் போது இந்திய அணிக்கு 157 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 9 விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக கடைசி நாள் ஆட்டம் முழுவதும் ஒரு பந்து கூட வீச முடியாத நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து போன்ற மைதானங்களில் வேகப்பந்து வீச்சு எடுபடும் என்ற காரணத்தினால் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. குறிப்பாக இந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜ் தனது வேகத்திலும் துல்லியத்திலும் அசத்தினார்.

அவரது பந்துவீச்சில் நல்ல திறன் இருந்தது. ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் வீரரான பேர்ஸ்டோ விக்கெட்டை வீழ்த்தியதும் தனது ஆக்ரோஷத்தை அவர் வெளிப்படுத்தினார்.

siraj

பேர்ஸ்டோவை ஆட்டமிழக்க வைத்த அவர் வாய் மீது கை வைத்து ஆக்ரோஷமாக வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் அவர் அந்த விக்கெட்டை கொண்டாடிய விதம் தவறு என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் தற்போது இங்கிலாந்து சென்று வர்ணனை செய்து வருகிறார். இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் சிராஜ் அந்த விக்கெட்டை கொண்டாடிய விதம் குறித்துப் பேசி பேசிய கார்த்திக் கூறுகையில் :

Siraj-1

அந்த போட்டியில் பேர்ஸ்டோவை நோக்கி ஆக்ரோஷமாக விக்கெட்டை கொண்டாடியது தேவையற்றது. இது சிராஜின் சர்வதேச கிரிக்கெட்டின் துவக்க காலம் போகப்போக அவர் அனுபவம் கிடைக்க கிடைக்க இதையெல்லாம் கற்றுக்கொள்வார் என கார்த்திக் அட்வைஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement