தோனிக்கு சீனியர்.! 8 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் வீரர்.!

karthickdinesh
- Advertisement -

நடந்த முடிந்த ஐபிஎல் போட்டியின் மூலம் இழந்த தனது திறமையை மீண்டு நிரூபித்து காட்டியவர் இந்த கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக். கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் இடம்பெறாமல் இருந்த தினேஷ் கார்த்திக் தற்போது நாளை (ஜூன் 14 ) இந்தியாவில் நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் 8 ஆண்டுகள் கழித்து விளையாடவுள்ளார்.

karthick

- Advertisement -

இளம் வீரராக இந்திய அணியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், தனது 19 வயதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக களமிறங்கினார். அதுவரை இந்திய விக்கெட்கீப்பராக இருந்த பார்திவ் படேல் சரியாக விளையாடததால் அவரது இடத்தை தினேஷ் கார்த்திக் பிடித்தார். அதன் பின்னர் 2004 ஆம் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சேர்க்கப்பட்டார்.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு சில போட்டிகளை தவிர வேறு எந்த போட்டியிலும் இவரது ஆட்டம் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லை. அதனால், இவர்க்கு மாற்றாக வந்தவர் தான் தோனி. ஆம், தோனி தினேஷ் கார்த்திக்கிற்கு பின்னர் தான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். தோனி தனது முதல் போட்டியில் சொற்ப ரன்களில் அவுட் ஆனாலும் அதன் பின்னர் தோனி செய்த மாயாஜாலங்களை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.

dineshkarthick

தோனியின் வருகைக்கு பின்னர் இந்திய அணி வேறு ஒரு கீப்பரை நினைத்து கூட பார்க்கவில்லை. இதனால் தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் வாய்ப்பு குறையப்பட்டது. கடைசியாக இவர் 2010 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்குபெற்றார். அந்த போட்டிக்கு பின்னர் தற்போது 8 ஆண்டுகள் கழித்து தான் இவருக்கு வெள்ளை சீருடையை அணியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை ஒழுங்காக தக்க வைத்துக் கொண்டு அணியில் நிலைப்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Advertisement