அவருக்கு வாய்ப்பு குடுங்க.! அவரோட கிரிக்கெட் வாழ்க்கைய முடிச்சிடாதீங்க.! கம்பிர் ஆதரவு

- Advertisement -

இந்திய அணியில் விளையாடிவரும் தமிழகத்தை சேர்ந்த வீரரான தினேஷ் கார்த்திக் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். அதுவும் லார்ட்ஸ் டெஸ்டின் போது இவரது ஆட்டம் ரொம்ப மோசமாக விளையாடினர். முதல் இன்னிங்சில் மூன்று பந்துகளை சந்தித்து 1 ரன் எடுத்து சாம் குர்ரான் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். பொதுவாக பந்துகளை தடுத்து ஆடும் கார்த்திக் அந்த பந்தில் போல்டானது, அவரது பார்மில் அவரில்லை என்பதை நமக்கு எடுத்து காட்டுகிறது.

kar o

இரண்டாவது இன்னிங்சில் தான் சந்தித்த முதல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். எனவே அவர் இனிவரும் தொடர்களுக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவது கொஞ்சம் சந்தேகம் தான். ஏனென்றால் நிறைய விக்கெட்கீப்பர் பேட்ஸ்மான்கள் இருக்கிறார்கள். அதிலும் ரிஷப் தனது சிறப்பான ஆட்டத்தை நிலையாக வைத்து இந்திய அணியில் தனது இடத்துக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான கவுதம் கம்பிர் தினேஷ் கார்த்திக்கு தனது ஆதரவினை தெரிவித்து இருக்கிறார். தினேஷ் கார்த்திக் நீண்ட வருடமாக கிரிக்கெட்டில் போராடி வருகிறார். சிறுவயதிலே விளையாட ஆரம்பித்த அவர் இன்று வரை நிலையான இடத்தை பிடிக்கவில்லை. மேலும், அவர் ஒரு சிறந்த வீரர். ஒருமுறை இந்திய அணி இங்கிலாந்து சென்ற போது அவர் அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தமுறை தடுமாறி கொண்டது இருக்கிறார்.

kar out

எனவே, அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் குடுக்கலாம் என்றும் ஒருவேளை வாய்ப்பு மறுக்கப்பட்டால் அவரால் இனிமேல் இந்திய அணியில் இடம் பிடிக்கவே முடியாது எனவும் தெரிவித்தார். கார்த்திக் தனது இறுதிக்கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது உள்ளதாகவும் அவருக்கு தனது ஆதரவினை தெரிவித்தார்.

Advertisement