தோனிக்கு டைம் கொடுத்த மாதிரி ரிஷப் பண்டுக்கும் டைம் கொடுங்க – திலீப் வெங்சர்க்கார் பேட்டி

Dilip
- Advertisement -

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இரண்டு டெஸ்ட் தொடர்களில், தனது சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட், இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தரமான ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார் என்றே சொல்லலாம். ஒரு பேட்ஸ்மேனாக அவர் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டிருந்தாலும், ஒரு முழுமையான விக்கெட் கீப்பராக அவரின் செயல்பாடுகள் இன்னும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியே வருகிறது.

pant

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான திலீப் வெங்சர்க்கார், ரிஷப் பன்ட் தனது கீப்பிங் திறமையை இனிவரும் காலங்களில் வளர்த்துக்கொள்வார் என்று கூறியதோடு மட்டுமல்லமால், அவரின் கீப்பிங் செயல்பாட்டை மகேந்திர சிங் தோணியின் கீப்பீங் செயல்பாட்டுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பன்ட் போன்ற ஒரு வீரர் இருப்பது, இந்திய அணிக்கு தான் மிகவும் நல்லது. அவர் தனி ஒரு ஆளாகவே ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடியவர்.

- Advertisement -

அவருடைய பேட்டிங்கை தான் நாம் முதன்மையானாக கருத வேண்டுமே தவிற விக்கெட் கீப்பிங் செயல்பாட்டை முதன்மை நோக்கமாக கருதக் கூடாது. ஒரு அணிக்கு விக்கெட் கீப்பிங் செயல்பாடு மிகவும் முக்கியமான ஒன்றுதான். ஆனால், மகேந்திர சிங் தோணிக்கு எப்படி அவருடைய விக்கெட் கீப்பிங் செயல்பாட்டை வளர்த்துக்கொள்ள நாம் நேரம் வழங்கினோமோ அதே போல ரிஷப் பன்ட்டிற்கும் நாம் போதிய நேரத்தை அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Rishab Pant

வழக்கத்திற்கு மாறான கீப்பிங் செயல்பாட்டினால், மகேந்திர சிங் தோணியும் ஆரம்ப காலத்தில் விமர்ச்சனங்களை சந்தித்தார். ஆனால் அவருடைய பேட்டிங் திறமையின் காரணமாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு தனது கீப்பிங் திறமையை வளர்த்துக் கொண்ட தோணி, உலகிலேயே தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

Pant

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பிங் இடத்திற்கு சாஹாவிற்கும், ரிஷப் பன்ட்டிற்கும் இடையில் போட்டி நிலவி வருகிறது. ஆனால் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் அதற்குப் பிறகு நடக்க இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரிஷப் பன்ட்டிற்கு தான் இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்கும் என்று இதற்கு முன்னராகவே விருத்திமான் சாஹா கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement