- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஃபார்ட் டைமரால் இந்தியாவை ஜெய்க்க முடியாது.. இந்த 3 மாற்றத்தை செய்ங்க.. கம்பீருக்கு வெங்சர்க்கார் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரில் முன்னிலை வகிக்கிறது. எனவே தொடரை சமன் செய்ய ஜூலை 23ஆம் தேதி துவங்கும் 4வது போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

இந்நிலையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணியை தவறாக தேர்ந்தெடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்கார் விமர்சித்துள்ளார். குறிப்பாக பகுதி நேர பவுலர்களை வைத்துக்கொண்டு வெற்றி பெற முடியாது என்று அவர் சாடியுள்ளார். எனவே 4வது போட்டியில் இந்தியா 5 முதன்மை பவுலர்களுடன் விளையாடுவது கட்டாயம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

பார்ட் டைமர்களால் முடியாது:

அதற்காக குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் புதிதாக அணிக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அவர்களுக்காக நித்திஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி வெங்சர்கார் பேசியது பின்வருமாறு. “அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவை நான் தேர்ந்தெடுப்பேன். நல்ல இடது கை பவுலரான அர்ஷ்தீப் காற்றில் பந்தை நகர்த்தி அசத்தக்கூடியவர்”

“அது இங்கிலாந்து சூழ்நிலைகளில் முக்கியமானது. அவர் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வார் என்பதும் முக்கியமானது. அவருடைய பந்து வீச்சை நான் பார்த்துள்ளேன். அவருக்காக நான் நித்திஷ் ரெட்டியை அணியிலிருந்து நீக்குவேன். சிராஜ், பும்ரா ஆகியோர் தொடர்ந்து விளையாட வேண்டும். குல்தீப் அணிக்குள் வர வாஷிங்டன் சுந்தர் வழி விட வேண்டும். ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல உங்களுக்கு 5 பவுலர்கள் தேவை”

- Advertisement -

5 பவுலர்கள் தேவை:

“ஒருவேளை உங்களுடைய டாப் 6 பேட்ஸ்மேன் நல்ல ஸ்கோரை அடிக்காவிட்டால் பவுலர்கள் பொறுப்பை எடுத்துக்கொண்டு வெற்றிக்காக நன்றாக பவுலிங் செய்ய வேண்டும். நீங்கள் பகுதி நேர பவுலர்களை வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியாது. சூழ்நிலை சுழலுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் குல்தீப் நல்ல தேர்வாக இருப்பார். சிராஜ், பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோருடன் குல்தீப் ஆகியோர் இருப்பது சிறந்த கலவையாகும்”

இதையும் படிங்க: விதர்பா அணியில் இருந்து பரோடா அணிக்கு தாவும் ஜிதேஷ் சர்மா.. க்ருனால் பாண்டியா தான் காரணம் – விவரம் இதோ

“இந்த பவுலிங் கலவை நமக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் அதற்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல டாப் 6 பேட்ஸ்மேன்கள் சொதப்பினால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியாது என்பதற்கு கடந்த போட்டி நல்ல எடுத்துக்காட்டாகும். எனவே கௌதம் கம்பீர் அணியை மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -