பி.சி.சி.ஐ மொத்த கன்ட்ரோலும் இவர் ஒருத்தர்கிட்ட தான் இருக்குனு நெனைக்குறாரு – கங்குலியை கிழித்தெடுத்த முன்னாள் வீரர்

Dilip-Vengsarkar

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆக இருந்த சவுரவ் கங்குலி கடந்த வருடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றார். அனைவரும் எதிர்பார்த்த படியே சௌரவ் கங்குலி தலைவரான பின்னர் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. பெரிதாக சொல்லிக்கொள்ளும்படியான மாற்றங்கள் இல்லை என்றாலும் வீரர்களுக்கான சங்கம் அமைத்தது, முன்னாள் வீரர்களுக்கான சங்கம் அமைத்தது, புதிய தேர்வுக்குழு என பல மாற்றத்தை ஏற்படுத்தினார்.

Ganguly

இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடருக்கு எதிரான அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மூன்றுவிதமான அணியிலும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. ரோகித் சர்மா ஏன் இடம்பெறவில்லை என்று பலரும் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவருக்கு காயம் அடைந்திருப்பதாக கங்குலி பொது வெளியில் வந்து பேட்டி கொடுத்தார். தேர்வுக்குழு தலைவர் சுனில் ஜோஷி மற்றும் ஐபிஎல் தலைவர் ஆகியோர் இருக்கையில் எந்த நிலையிலும் அவர்களுக்கு பதிலாக சவுரவ் கங்குலி வந்து பதில் சொல்கிறார். இந்நிலையில் கங்குலியின் செயலை தற்போது திலீப் வெங்சர்க்கார் சர்ச்சைக்குரிய செயலாக மாற்றியுள்ளார்.

Ganguly 1

முன்னாள் தேர்வு குழு தலைவரும் இந்திய அணியின் வீரருமான திலிப் வெங்சர்க்கார் இது குறித்து பேசியிருக்கிறார். கங்குலியின் தன்னுடைய தலையில் அனைத்து பொருப்புகளையும் எடுத்து போட்டுக் கொள்கிறார். ஒரு வீரர் ஏன் நீக்கப் பட்டார், என்றும் ஒரு வீரரின் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர் ஏன் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

Ganguly

தேர்வுக்குழு தேர்வு குழு தலைவரே இந்த விளக்கங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால் சவுரவ் கங்குலி அவர்களைவிட திறமையானவராக தன்மை கருதி கொள்கிறாரா இல்லை அனைத்து அதிகாரமும் தன்னிடம் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா? எப்போதும் முன்னாள் வீரர்கள் தான் அணியை வழிநடத்த வேண்டும். ஆனால் சௌரவ் கங்குலி அதனை எல்லாம் மீறி விட்டு எதேச்சையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் திலிப் வெங்சர்க்கார்.