இந்திய அணியின் தோல்விக்கு இவர்தான் காரணம். முட்டாள் தனமாக முடிவு எடுக்குறாங்க – முன்னாள் வீரர் விளாசல்

Williamson-1
- Advertisement -

நியுஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என முன்னாள் வீரர் வந்து திலிப் வெங்சர்க்கார் சாடியுள்ளார். நியுஸிலாந்தில் டி20 தொடரில் வெற்றி பெற்றதன் பின்னர் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வாஷ் அவுட் ஆனது.

Ind-lose

- Advertisement -

இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு இந்திய அணி உள்ளாகியுள்ளது. பலரும் பல காரணத்தை இந்திய அணியின் தோல்விக்காக சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்கசர்கார் வித்தியாசமான காரணம் ஒன்றை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது :

இந்திய அணியின் தோல்விக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வுக்குழு தான் காரணம். டி20 உலக கோப்பை வரும் வேளையில் இந்திய அணி டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு மட்டுமே சிறப்பு கவனம் செலுத்துவதால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சரியாக இந்திய அணியை வழி நடத்தவில்லை. இதற்கு தேர்வுக்குழு தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார் திலிப் வெங்சர்க்கார்.

Gill

ஏற்கனவே இதே காரணத்தை சொல்லி முன்னாள் வீரர்கள் பலரும் சுட்டி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் சிறப்பான வீரர்கள் இருக்க தேவையில்லாமல் மாற்றி மாற்றி வீரர்களை இறக்குவதால் இந்த தோல்வி ஏற்படுகிறது என்பது நிச்சயம் உண்மைதான்.

Advertisement