தோனி மற்றும் கோலி ஆகியோர் ஜாம்பவான்களாக மாற இவர் ஒருவரே காரணம் – யார் தெரியுமா ?

Kohli
- Advertisement -

இந்திய அணியில் சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமணன், சேவாக் மற்றும் யுவராஜ் போன்ற ஜாம்பவான் வீரர்களுக்கு அடுத்து கடைசியாக 15 ஆண்டுகளில் தோன்றிய சிறந்த வீரர்கள் யார் என்றால் தற்போது உள்ள தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் தான் என்றே கூற முடியும்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக தோனி மற்றும் கோலி ஆகிய இரண்டு பேருமே தற்போதைய கிரிக்கெட் உலகில் தங்களுக்கு என்று ஒரு பெயரை பெற்றுள்ளனர். அவர்களின் இந்த சிறப்பான திறமை அவர்களை தற்போது உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரையும் இளமைக் காலத்திலேயே அடையாளம் கண்ட தேர்வு குழு தலைவர் குறித்து இந்த பதிவில் நாம் காண உள்ளோம்.

அதன்படி இந்திய அணியின் சிறந்த தேர்வுக்குழு தலைவராக விளங்கியவர் திலிப் வெங்சர்க்கார். இந்திய அணியில் கங்குலி கேப்டன் பதவியை இழந்ததை தொடர்ந்து இந்திய அணியில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. கங்குலிக்கு பிறகு இந்திய அணிக்கு புதிய கேப்டனாக டிராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Kohli

டிராவிட் கேப்டனாக பொறுப்பேற்ற 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்திய அணி படு மோசமாக தோல்வி அடைந்து வெளியேறியது. அதன்பின்னர் இளம் வீரர் ஒருவரை கேப்டனாக மாற்றும் முடிவில் இந்திய தேர்வு குழு நிர்வாகம் களமிறங்கியது. அப்பொழுது தேர்வுக்குழு தலைவராக இருந்த திலிப் வெங்சர்க்கார் தோனியை புதிய கேப்டனாக மாற்ற முடிவு செய்தார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி அண்டர் 19 அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் கோலியை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் வற்புறுத்தி அவரை அணிக்குள் கொண்டு வந்தார். அவரின் இந்த இரண்டு சிறப்பான முடிவுகளும் இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்களை அடையாளம் காட்டி அணிக்குள் கொண்டு வந்தது.

dilip

இந்த இருவரையும் அடையாளம் கண்டதில் மிகப்பெரும் பங்கு அவருக்கு உள்ளது என்றால் அது மிகையல்ல. இவ்வாறு தோனி மற்றும் கோலி ஆகியோர் இந்திய அணியில் நுழைந்து இன்று பெரிய ஜாம்பவானாக வலம் வர அவர்களை இளம் வயதிலேயே தேர்வு செய்த திலீப் வெங்சர்கார் தான் காரணம் என்றும் அவரை மீண்டும் தேர்வு குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என்றும் தற்போது சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement