ப்ரித்வி ஷாவுக்கு பதில் இவரை மீண்டும் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறக்குங்கள் – கொதித்தெழுந்த முன்னாள் வீரர்

Shaw
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி ப்ரித்வி ஷா, புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் அரைசதங்களுடன் 242 ரன்களை குவித்தது. அதன்பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய நேசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

INDvsNZ

- Advertisement -

இந்த நியூசிலாந்து தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ராகுலை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் முன்னாள் இந்திய இடதுகை ஸ்பின் பவுலர் திலிப் தோஷி இந்திய ஆட்டத்தின் மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :

இந்திய அணி தேர்வுக்குழுவும், இந்திய அணியின் திட்ட வகுப்பு குழுவும் ஏதோ தவறு செய்கின்றனர். அவர்கள் எதைப்பற்றியும் சிந்திப்பதில்லை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் ராகுல் இப்போது நன்றாக ஆடி வருகிறார். அவரை டெஸ்ட் அணியில் வைத்திருக்க வேண்டும் அதேபோல் ஷிகர் தவன் உடல் தகுதி பெற்றால் அவரையும் அணியில் கொண்டு வந்து துவக்க வீரராக களம் இறக்க வேண்டும்.

dhawan

ப்ரித்வி ஷா நிச்சயம் திறமையான வீரர் தான் ஆனால் அவருக்கான நேரம் இருக்கிறது. ஏற்கனவே நிரூபித்த வீரர்கள் அணியில் இருப்பது அவசியம் அந்தவகையில் ராகுல் மற்றும் தவான் ஆகியோர் அணிக்கு வரவேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஹா போன்ற வீரர்கள் இன்னும் வாய்ப்புக்கு காத்திருக்கலாம்.

Rahul

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை மிக முக்கியமானது. ராகுலுக்கு இப்போது அனைத்தும் சரியாக இருக்கிறது. அதேபோல் சிறந்த விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதாக இருந்தால் சஹாவே சிறந்த விக்கெட் கீப்பராக இருப்பார். அவர் பேட்டிங் ஒன்னும் மோசம் கிடையாது. அவர் இறங்கும் சூழலில் அப்படி தான் விளையாட முடியும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement