ஒருநாள் போட்டிகளில் விளையாடும் தகுதி உள்ள இவரை டெஸ்ட் அணியில் மட்டும் விளையாட வைக்குறாங்க – முன்னாள் வீரர் கவலை

Ind-1
- Advertisement -

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாகவும் 2014ஆம் ஆண்டும், ஒருநாள் அணியின் கேப்டனாக 2017 ஆண்டு ஆண்டு பொறுப்பேற்றார். அதிலிருந்து விராட் கோலி மூன்று வகையான போட்டிகளிலும் தற்போது வரை ஒரு கேப்டனாக பட்டையை கிளப்பி வருகிறார். இவரது காலகட்டத்தில்தான் டெஸ்ட் போட்டியில் வெளிநாடுகளில் அதிகமாக வெற்றி பெறத் துவங்கியது.

indvsaus

- Advertisement -

வரலாற்று சிறப்பு மிக்க வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி பெற்றது விராட் கோலியின் தலைமையில்தான். பின்னர் தென் ஆப்பிரிக்காவில் ஒரு போட்டியில் நியூசிலாந்தில் ஒரு போட்டி, இங்கிலாந்தில் ஒரு போட்டியில் இவரது தலைமையில் வெல்லப்பட்டது

ஒருநாள் போட்டிகளிலும் இவரது வெற்றியின் சதவீதம் 70 ஆக இருக்கிறது. எங்கு சென்றாலும் வென்று கொண்டே இருக்கிறார். அப்படிப்பட்ட அணியை கட்டமைத்து வைத்திருக்கிறார். இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் சத்தீஷ்வர் புஜாராவை விராட் கோலி வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேசியுள்ளார் முன்னாள் வீரர் திலீப் ஜோஷி. அவர் கூறுகையில்…

Dilip

புஜாராவை போன்ற ஒரு வீரரை எனது ஒருநாள் அணியில் இருந்து நீக்க மாட்டேன். அவரை ஒரு நாள் போட்டிகளில் ஒரு பக்கம் வைத்து விட்டு விடுவேன். 50 ஓவர்களும் அவர் ஆட வேண்டும். இதுபோன்ற ஆட்டம் தான் அவருக்கு சரியாக இருக்கும்.

Cheteshwar Pujara

ஒருபுறம் இதேபோன்று 50 ஓவர்கள் ஆடும் வீரர் இருக்கும்வரை எதிர்முனையில் இருக்கும் வீரர்கள் அதிரடியாக ஆட வாய்ப்பு கிடைக்கும். அவர் போன்ற ஒரு தரம் வாய்ந்த வீரர் ஒருநாள் அணியில் இல்லாமல் இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது, என்னைப்பொறுத்தவரை புஜாரா இந்திய ஒருநாள் அணியிலும் விளையாட தகுதி உடையவர் என்று கூறியுள்ளார் திலீப் ஜோஷி.

Advertisement