இந்திய அணியின் டி20 கேப்டன் பதவிக்கு இவரே கரெக்ட்டா இருப்பார் – திலீப் வெங்சர்க்கார் கருத்து

Dilip
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி தற்போது மூன்று வகையான கிரிக்கெட்டிலும் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதன் காரணமாக t20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று விராட் கோலி திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதன் காரணமாக அடுத்து இந்திய அணியின் டி20 கேப்டன் யார் ? என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் விவாதிக்கப்படும் டாப்பிக்காக மாறியுள்ளது.

Kohli

- Advertisement -

இந்நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார் இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியை கோலிக்கு அடுத்து வழி நடத்த தகுதியானவர் என்றால் அது ரோகித் சர்மா தான்.

ஏனெனில் அவருக்கு கேப்டன் பதவிக்கான வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ள ரோஹித் சர்மா 5 முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். எனவே நிச்சயம் விராட் கோலி பதவியில் இருந்து விலகும் பட்சத்தில் ரோஹித் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும்.

Kohli

விராட் கோலியின் இந்த அறிவிப்பு நான் எதிர்பார்த்ததுதான். கடந்த எட்டு வருடங்களாக இந்திய அணியை நம்பர் ஒன் இடத்துக்கு கொண்டு சென்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் பேட்டிங் சொல்லும்போது அவர் மீது பெரிய அளவில் அழுத்தம் உண்டாகிறது. எனவே அவர் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்துள்ளார்.

Kohli

இந்த டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என நம்புகிறேன். டி20 போட்டியில் கடைசியாக அவர் வெற்றி பெறும் தொடராக இந்த உலகக்கோப்பை தொடர் இருக்க வேண்டும் என வெங்சர்க்கார் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement