ஒருநாள் போட்டிக்கு வெள்ளை பந்து, டெஸ்ட் போட்டிக்கு சிவப்பு பந்தும் பயன்படுத்துவது ஏன் ?

Cricket
- Advertisement -

ஒரு நாள் மற்றும் பகலிரவு போட்டிகளில் வெள்ளை நிற பந்தும், டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்துகளையும் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா!

Ball

- Advertisement -

பொதுவாக கிரிக்கெட் விளையாடும் போது இரண்டு வகையான பந்துகளை பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள்.அதிலும் 5நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிற பந்துகளும், ஒரு நாள் மற்றும் பகலிரவு போட்டிகளில் வெள்ளை நிற பந்துகளும் பயன்படுத்தப்படும்.

பலருக்கு ஏன் இப்படி ஒரே கிரிக்கெட்டில் இரு வேறு நிற பந்துகளை பயன்படுத்துகின்றார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கும்.
அதற்கான காரணங்களை இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள்.

டெஸ்ட் போட்டிகளில் ஏன் வெள்ளை நிற பந்து பயன்படுத்துகிறார்கள்! டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் காலை 8 முதல் 9 மணிக்குள் தொடங்கி மாலை 5மணிக்குள் முடிந்துவிடும்.

- Advertisement -

பகலில் மட்டும் ஆடப்படும் டெஸ்ட் போட்டிகளில் , பகல் வேலை என்பதால் சூரியனின் வெளிச்சத்தால் வெள்ளைநிற பந்தை பயன்படுத்தும்போது சற்று சிரமமாக இருக்கும்,குறிப்பாக அனைவரும் வெள்ளை நிற ஆடை அணிந்திருப்பதால் வெள்ளையாக இருக்கும் பந்து வரும் கோணத்தை சரியாக கணிக்கமுடியாது.

test match

சிவப்பு நிற பந்து என்றால் பகலுக்கு எதிர்மாறாக இருக்கும்போது வீரர்களின் பார்வைக்கு பந்து எளிதாக தெரியும்
வெள்ளை நிற ஆடை அணிந்திருப்பதால் வீரர்களின் பக்கவாட்டை கடந்து வரும் பந்து சற்று குழப்பத்தை உண்டாக்கும் இரண்டும் வெள்ளை என்பதால்.

- Advertisement -

சிவப்பு நிற பந்து என்றால் , அனைத்துக்கும் எதிர்மாறாக இருப்பதால் வீரர்கள் சிரமம் இல்லாமல் விளையாட உதவும். இந்த காரணங்களை தவிர்ப்பதற்காக தான் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் வெள்ளை நிறப்பந்துகள் தவிர்க்கப்பட்டு அதற்கு பதிலாக சிவப்பு நிறப்பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு நாள் மற்றும் பகலிரவு போட்டிகளில் மட்டும் ஏன் வெள்ளை நிறப்பந்து ?

- Advertisement -

ஒரு நாள் போட்டிகள் பொதுவாக 9 மணிக்கு தொடங்கி மாலை ஆறு மணி வரையிலும் நடைபெறும். சிலநேரங்களில் அதுவுமில்லாமல் ஒரே தொடரில் சில ஆட்டங்கள் பகலாகவும் சில ஆட்டங்கள் பகலிரவு ஆட்டங்களாகவும் நடைபெறும். எனவே இரவு நேரங்களில் சிவப்பு நிறப்பந்துகளை பயன்படுத்தி விளையாடினால் இரவின் கருமையால் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்பவர்களுக்கு பந்து கண்களுக்கு தெரியாது.

இருளில் சிவப்பு நிறப்பந்தை கண்டுபிடித்து அதன்பிறகு அதை தடுப்பதோ அல்லது கேட்ச் பிடிப்பதோ என்பது கடினமான காரியம்.
இரவு நேரம் என்பதுதான் இதன் முக்கிய காரணம்.
இருட்டில் சிவப்பு பந்து சரியாக கண்களுக்கு தெரியாது.
பொதுவாக இருட்டில் வெள்ளை நிறம் தவிர மற்ற நிறங்கள் கண்களுக்கு சரியாக தென்படாது.
ஆகவே அதற்கு எதிர்மாறாக வெள்ளையை பயன்படுத்தினால் வீரர்களுக்கு சிரமம் இல்லாமல் விளையாடுவார்கள்.

stadium

நீங்கள் கேட்கலாம்.. டெஸ்ட் போட்டி போல தானே ஒரு நாள் போட்டி பகலில் நடக்கிறது. அதற்கு மட்டும் ஏன் பந்து வேறுபடுகிறது என்று..? டெஸ்ட் போட்டிகள் பகலில் மட்டும்தான் நடக்கும்.
ஆனால் ஒருநாள் போட்டிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடக்கும்..
டெஸ்ட் போட்டிகள் பகலில் மட்டும் நடக்கும் என்பதால் சிவப்பு நிற பந்தை மட்டும் பயன்படுத்துவார்கள்.

ஆனால் ஒருநாள் போட்டி என்றால் இரவிலும் நடக்கும் என்பதால் பகலில் ஒரு பந்து இரவில் ஒரு பந்து என்று மாற்ற முடியாது. அது போன்ற விதிகள் கிரிக்கெட்டில் இல்லை.

Advertisement