லெஜெண்ட்டான அவர்கிட்ட கத்துக்க முயற்சி பண்றேன்.. விராட், ரோஹித் பற்றி துருவ் ஜுரேல் பேட்டி

Dhruv Jurel
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் தற்சமயத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றனர். ஏனெனில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் அவர்கள் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர். மேலும் நிறைய உலக சாதனைகளையும் படைத்துள்ள அவர்களிடம் ஏராளமான அனுபவம் நிறைந்திருக்கிறது.

அதனால் இந்திய அணியில் அறிமுகமாகும் இளம் வீரர்கள் அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். அந்த வரிசையில் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துருவ் ஜுரேல் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 4வது போட்டியில் அரை சதமடித்த அவர் இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

சீனியர் ஜூனியர்:
இந்நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரேல் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக கருதப்படும் விராட் கோலியிடம் கற்றுக்கொள்ள முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் கேப்டன் ரோஹித் சர்மா சீனியர் ஜூனியர் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைத்து வீரர்களுக்கும் ஆதரவு கொடுப்பார் என்று அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“எப்போதும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொள்ள முயற்சிக்கிறேன். ஏனெனில் அவர் கிரிக்கெட்டின் லெஜன்ட். அவர் எப்படி இதை செய்தார், அதற்காக பின்னணியில் என்ன செய்தார் என்பனவற்றை நான் எப்போதும் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பேன். அதனால் அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் கிரிக்கெட்டை பற்றியே நான் பேசினேன்”

- Advertisement -

“அவரிடம் நீங்கள் இருக்கும் போது விராட் கோலியின் ஒளி உங்களைச் சுற்றியிருப்பதாக கருதுவீர்கள். அதனால் நாமும் ஏதாவது செய்தால் நம்மிடமும் மக்கள் வந்து கேட்பார்கள் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். இந்தியாவுக்காக 15 வருடங்கள் விளையாடியுள்ள விராட் கோலி எப்போதும் டாமினேட் செய்துள்ளார். அதே போலவே நானும் செயல்பட முயற்சிக்கிறேன். ரோஹித் சர்மா உண்மையில் கூலானவர்”

இதையும் படிங்க: வெற்றிகரமான இந்திய அணியில் அதுக்கு வாய்ப்பில்ல.. மோர்கல் இதை செஞ்சா மதிப்பை சேர்க்கலாம்.. அல்பி அட்வைஸ்

“அவர் உங்களிடம் சீனியர் அல்லது ஜூனியர் என்று பார்க்காமல் பேசக்கூடியவர். சாதாரணமாக பேசக்கூடிய அவரிடம் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நேரடியாக கேட்கலாம். அவர் அணியில் கச்சிதமாக இருக்கிறோம் என்று வீரர்களை உணர வைப்பார்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்த மாதம் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement